ஜெயம் ரவி – நீத்து சந்திரா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகிவந்த ஆதி பகவன் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இனி அமீரின் ஆதிபகவன் என்றே இந்தப் படம் அழைக்கப்படும். இதே தலைப்பில்தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதிபகவன் என்ற தலைப்பு இந்துக்களின் கடவுள்களைக் குறிப்பதாக உள்ளதால் இப்படத்தின் தலைப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்யடுத்து, இப்படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு இப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறும், அப்படி நீக்கினால்தான் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அமீரிடம் கூறிவிட்டனர்.
அதனால் என்ன பரவாயில்லை… நீங்கள் ஏ சான்றிதழே கொடுங்கள்… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமீர் கூறிவிட்டதால், ஏ சான்று வழங்கப்பட்டது.
மேலும் படத்தின் தலைப்பையும் மாற்றுமாறு அமீரிடம் தணிக்கைக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
அதற்கும் ஒப்புக் கொண்ட அமீர், தலைப்பை ‘அமீரின் ஆதி-பகவன்’ என்று மாற்றிக் கொண்டார்.
பிழைக்கத் தெரியாத மனுசன்… இப்படியா சப்பென்று முடிப்பது… இந்து அமைப்புகளைப் போராட விட்டிருந்தால், பல கோடி ரூபாய் பப்ளிசிட்டியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்குமே அமீர்!!
Post a Comment