வேலூர்: வாணியம்பாடியில் கமலின் விஸ்வரூபம் படம் ஓடிய தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூரில் உள்ளது சங்கீத் தியேட்டர். இந்த தியேட்டர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் உரிமையாளர் கடந்த 2.5 ஆண்டு காலமாக நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை. இதனால் வரி தொகை ரூ. 1,82,575 நிலுவையில் உள்ளது. இந்த தொகையைக் கேட்டு உரிமையாளருக்கு நகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.
இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி தலைமையில், மேலாளர் சுரேஷ், குருசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சங்கீத் தியேட்டருக்கு சென்று கதவைப் பூட்டி சீல் வைத்தனர். அந்த தியேட்டரில் தற்போது கமல் ஹாசனின் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருந்தது. நேற்று காலை காட்சி முடிந்ததும் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டதால் மேட்னி ஷோவுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Post a Comment