மாணவி கடத்தல் வழக்கு: நான் எங்கும் ஓடிவிடவில்லை - நடிகை சனா கான்

Sana Khan Denies Kidnap Attempt

மும்பை: 15 வயது மாணவியை தன் உறவுக்கார இளைஞனுக்காக கடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் எங்கும் ஓடிவிடவில்லை என்றும், தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருவதாகவும் சனாகான் தெரிவித்தார்.

பிரபல நடிகை சனா கான், தன் உறவுக்கார இளைஞன் ஒருவன் காதலிக்கும் மைனர் பெண்ணை கடத்த துணை போனார் என மும்பை போலீசில் அப்பெண்ணின் தாயார் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் சனா கானை தேடுவதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சனா கான் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "நான் போலீசுக்கு பயந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுவது தவறு. தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறேன்.

பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். மைனர் பெண்ணை நான் கடத்த முயன்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அந்த பெண்ணின் தாய் எனது ரசிகை என்றனர். அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. அவள் பின்னால் வருவதாகச் சொன்னாள். நான் எனது உறவுக்கார இளைஞனை பார்க்க போனபோது அவர்தான் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த அப்பெண்ணை சந்திக்கும்படி வற்புறுத்தினார்.

உறவுக்காரருக்கும் அந்த பெண்ணுக்கும் பிரச்சினை இருந்திருந்தால் அந்தப் பெண் ஏன் என்னைச் சந்திக்க வரவேண்டும். அந்த கட்டிடத்தில் உள்ள சிசி டி.வி. கேமராவில் இவை எல்லாம் பதிவாகி இருக்கும். இன்னொன்னு, பெண்ணைக் கடத்துவது என் வேலையல்ல.. அதற்கான அவசியமும் இல்லை," என்றார்.

 

காவ்யா மாதவனுக்காக மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தாரா நடிகர் திலீப்?

திருவனந்தபுரம்: தன் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த செய்திகளை நடிகர் திலீப் மறுத்துள்ளார்.

மஞ்சுவாரியர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர். மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலீப்புக்கும் காதல் மலர்ந்தது. 1998-ல் திருமணம் செய்து கொண்டனர்.

கொச்சியில் தனிக்குடித்தனம் துவங்கினார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு மஞ்சு வாரியர் முழுமையாக ஒதுங்கிவிட்டார். அமைதியாகப் போன அவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களாக திலீப்பும் மஞ்சுவாரியரும் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இருவரும் இப்போது பிரிந்து விட்டதாகவும் தனித்தனி வீடுகளில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. மஞ்சுவாரியரை திலீப் விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்குக் காரணம், கணவனை விவாகரத்து செய்துவிட்டு இப்போது திலீப்புடன் நெருக்கம் காட்டி வரும் காவ்யா மாதவன்தான் என்று கூறப்படுகிறது.

actor dileep divorces wife manju warrior

இதற்கிடையே, நீண்ட நாளாக இருந்து வரும் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திலீப்.

அவர் கூறுகையில், "மஞ்சுவாரியரை விவகாரத்து செய்ததாக வதந்திகள் பரப்பியுள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். அதை வைத்து பிரிந்து விட்டதாக கருதக் கூடாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள திலீப், அது நிரந்தர பிரிவல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 

ஐ லவ் யூ, ஐ லவ் யூ: ஹன்சிகாவை துரத்தும் இளம் ஹீரோக்கள்

சென்னை: ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் காதல் தூது அனுப்பி தொல்லை கொடுக்கிறார்களாம்.

அண்மையில் பேட்டி அளித்த ஹன்சிகா தன்னை பலர் காதலிப்பதாகவும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஹன்சிகாவும் பிரபுதேவாவும் நெருக்கமானதால் நயன்தாரா பிரிந்தார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்த இரண்டையுமே ஹன்சிகா மறுத்தார்.

young heroes give love torture hansika

இந்நிலையில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கும் ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் சிலர் காதல் தூது விடுகிறார்களாம். ஆனால் அவற்றையெல்லாம் அம்மணி கண்டுகொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இளவட்டங்கள் விடாமல் முயற்சி செய்து வருகிறார்களாம்.

அப்படி தன்னை காதலிப்பதாக துரத்துபவர்களிடம் சாரி எனக்கு உங்கள் மீது காதலும் வரவில்லை, எனக்கு காதலிக்க நேரமும் இல்லை என்று கூறி நைசாக நழுவிவிடுகிறாராம் ஹன்சிகா. தனக்கு இப்படி காதல் தூது விட்டு தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால் தன்னுடைய மார்க்கெட் அடிபடும் என்பதால் அமைதி காத்து வருகிறாராம்.

 

அந்த அதிசயம் நடந்தே விட்டது... வைரமுத்து மகனுடன் கைகோர்க்கிறார் இசைஞானி!!

Ilayarajaa Join Hands With Vairamuthu Son

சென்னை: எத்தனையோ பேர் இந்த சினிமாவில் பிரிந்திருக்கிறார்கள். சேர்ந்தோ சேராமலோ போயிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரும் மீண்டும் சேர மாட்டார்களா என பல கோடி இசை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் ஏங்கியது இளையராஜா - வைரமுத்து பிரிவுக்காகத்தான்!

பல நூறு தேன் சுவைப் பாடல்களைத் தந்த இந்த இசைக் கூட்டணியின் பிரிவு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், இப்போது வேறு வகையில் ஒன்றுகூடியுள்ளது.

வைரமுத்துவோடு இளையராஜா நேரடியாக இணையாவிட்டாலும், வைரமுத்து மகனும் இன்றைய முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவருமான மதன் கார்க்கியுடன் இணைகிறார்.

மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மதன் கார்க்கி.

ஏற்கெனவே யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பையும் பெற்றுள்ள மதன் கார்க்கிக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த புதிய கூட்டணி, பழைய கூட்டணியை திரும்ப உயிர்ப்பிக்கும் காரணியாக அமைய வாழ்த்துவோம்!

 

ராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு!

Tms Ashes Strewn Rameshwaram Ocean

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் டிஎம் சவுந்திரராஜனின் அஸ்தி, ராமேஸ்வரம் கடலில் நேற்று கரைக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட உலகின் பிரபல பின்னணி சாதனைப் பாடகர், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட டி.எம்.சவுந்தர்ராஜன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை விட்டு சென்றுள்ள டி.எம்.எஸ். உடலுக்கு உலகத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையை சேர்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் சென்னையில் வசித்தாலும், அவருக்கு மதுரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனி ரசிகர் மன்றமே வைத்துள்ளனர் டிஎம்எஸ்ஸுக்காக.

இந்த ரசிகர்கள் டி.எம்.எஸ். அஸ்தியை ராமேசுவரத்தில் கரைப்பதற்காக மதுரை கொண்டு வந்தனர். இந்த அஸ்தி கலசத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்ட டி.எம்.எஸ். அஸ்தியை அவரது மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அக்னி தீர்த்த கடலில் அஸ்தி கரைக்கப்பட்டது.

அஸ்தி ஊர்வலத்தில் மதுரை சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

 

விஜய்யின் தலைவாவை வெளியிடும் வேந்தர் மூவீஸ்!

எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தலைவா படத்தின் உரிமையை வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தலைவா. அமலா பால் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் பெருந்தொகை கொடுத்து வேந்தர் மூவிஸ் பெற்றுள்ளது.

vendhar movies release thalaivaa

இதன் கேரள விநியோக உரிமையை துப்பாக்கி படத்தை வெளியிட்ட தமீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கர்நாடக உரிமையை கே மஞ்சு பெற்றுள்ளார்.

இதனிடையே படத்தின் ஆடியோவை விஜய் பிறந்த நாளான அதாவது ஜூன் 22ம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

வேந்தர் மூவீஸ் நிறுவனம் ஏற்கெனவே 5 படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த நிறுவனம் வாங்கி வெளியிட்ட எதிர்நீச்சல் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் வெற்றி விழாவை ஜெனீவாவில் பாரிவேந்தர் தலைமையில் நடத்தவிருக்கின்றனர்.

 

தல, கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்: நேரில் சென்று அழைத்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

Gv Prakash Invites Ajith The Big Day

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் அஜீத் குமாரை நேரில் சந்தித்து தங்கள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது நீண்டநாள் காதலியான பாடகி சைந்தவியை வரும் ஜூன் மாதம் 27ம் தேதி மணக்கிறார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள மேயர் ராமனாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு காதல் ஜோடி தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருகிறது.

இந்நிலையில் அவர்கள் அஜீத் மற்றும் குடும்பத்தாரை சந்தித்து அழைப்பிதழ் அளித்துள்ளனர். அஜீத் நடித்த கிரீடம் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார்.

அந்த படத்தில் வரும் அக்கம் பக்கம் பாடல் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெப்சி போராட்டம் வாபஸ்... இன்று முதல் படப்பிடிப்பு நடக்கும்!

சென்னை: கடந்த இரண்டு தினங்களாக நடந்த ‘பெப்சி' தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொருளாளர் அங்கமுத்து சண்முகம், நிர்வாகி தனபால் ஆகிய இருவரையும் திரைப்பட கார் டிரைவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதை தொடர்ந்து, ‘பெப்சி' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன. விஷால் நடித்த ‘பாண்டிய நாடு, கார்த்தி நடித்த ‘பிரியாணி' உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

fefsi withdraws strike

‘பெப்சி' தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 2- வது நாளாக தொடர்ந்தது. இதனால் நேற்றும் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருடனும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

‘பெப்சி' தொழிலாளர்கள் நேற்று மாலை தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள்.

இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பெப்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதாகவும், தாக்குதலில் தொடர்புள்ள மேலும் ஒருவரையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவோம் என்றும் ‘பெப்சி' சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன்...! - மோசடி ராணி லீனா நீதிமன்றத்தில் கதறல்!

Leena Mariya Paul Bursts Before Magistrate

டெல்லி: பல கோடி மோசடியில் கைதாகியுள்ள பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகருடன் லிவிங் டுகெதர் முறையில் மனைவியாகவே வாழ்ந்ததால் கர்ப்பமாக உள்ளேன். என்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம்," என்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கதறி அழுதார் நடிகை லீனா மரியா பால்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை எஞ்ஜினீயர்.

லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் ரூ.19 கோடி கடன் வாங்கி உள்ளனர்.

இதுதவிர, இதே ஐஏஎஸ் அதிகாரி முகமூடியுடன் பலரிடம் கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்றுள்ளனர் பாலாஜியும் லீனாவும்.

அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக கனரா வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து டெல்லி போலீசாரின் உதவியுடன் டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த நடிகை லீனா மரியா பாலை கைது செய்தனர். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.

பாலாஜியையும் சேர்த்தே கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வந்தபோது அவர் தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நான் கர்ப்பமாக உள்ளேன்.. ஜெயிலுக்கு அனுப்பாதீங்க!

நடிகை லீனாவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார்.

"நான், சுகாசுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், மோசடியில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, விட்டு விடுங்கள்," என்று கெஞ்சினார்.

சென்னைக்கு...

ஆனால் மாஜிஸ்திரேட்டு, 72 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நடிகை லீனாவை பாதுகாப்பாக ரெயிலில் சென்னை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருக்க, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள இன்ஸ்பெக்டர் விஜயகுமாரும், நடிகை லீனாவை அழைத்துக்கொண்டு நேற்று இரவு டெல்லியில் இருந்து ரெயிலில் சென்னை புறப்பட்டனர். அவர்கள் வரும் ரெயில் இன்று வியாழக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலுக்கு வருகிறது.

 

மது அருந்துவது, புகைக்கும் காட்சிகளில் நடிக்காத எம்ஜிஆர் கடவுளாகப் பார்க்கப்பட்டார்! - நீதிபதி

Hc Judge Hails Mgr Sivaji Movies Its Honest And Content

சென்னை: மது அருந்துவது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் ஒருபோதும் நடிக்காத எம்ஜிஆரை மக்கள் கடவுளாகப் பார்த்தனர். இறக்கும் வரை அவரை முதல் அமைச்சராகவே உயர்த்தி வைத்தனர், என்று உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் கூறினார்.

மடிசார் மாமி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இன்றைய படங்களின் கதை, ஹீரோக்களின் தன்மை மற்றும் தலைப்புகளை ஒரு பிடிபிடித்தார்.

நீதிபதி தன் உத்தரவில், "பாசமலர், பணமா பாசமா, அன்புக் கரங்கள், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, எதிர் நீச்சல், கப்பலோட்டிய தமிழன் என்று கடந்த காலங்களில் படங்கள் வெளியாயின. சட்டத்தை மதிப்பவர்களாகவும், கடின உழைப்பாளியாகவும், நேர்மை, அர்ப்பணிப்பு உடையவர்களாகவும் கதாநாயகர்கள் சித்தரிக்கப்பட்டனர். இதனால்தான் அந்த கால கதாநாயகர்கள் கடவுளாக வணங்கப்பட்டனர்.

மது அருந்துவது போலவும், புகைப்பிடிப்பது போலவும் என்றுமே நடிக்காத எம்.ஜி.ஆரை இறக்கும் வரை முதல்- அமைச்சராக மக்கள் உயர்த்தி வைத்தனர். இன்றைக்கு குற்றங்கள் செய்யும் கதாநாயகர்கள் கடைசியில் தப்பி விடுவது போல காட்டுகிறார்கள். கதாநாயகர்களை பின்பற்ற அவர்களின் ரசிகர்கள் விரும்புவதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பணம் சம்பாதிக்க செக்ஸ், வன்முறை கொடூர காட்சிகளை காட்டுவதால் சமூகம் பாதிக்கப்படுகிறது. திருட்டு பயலே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, போக்கிரி, சண்டைகோழி, மங்காத்தா, ரத்த சரித்திரம் என்ற தலைப்புகளில் படங்கள் வருகின்றன. நல்ல தலைப்புகளை படங்களுக்கு வைக்க வேண்டும். தணிக்கை துறை செயல்படுகிறதா என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவு திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் படத் தலைப்புகளை மறுபரிசீலனை செய்யவும் தயாராகி வருகின்றனர் மனசாட்சியுள்ள சில தயாரிப்பாளர்கள்.

 

பாத்ஷா ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினி முயற்சி

Rajini Tries Make Dhanush As Baadshah

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர். நடித்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படமான பாத்ஷா தமிழ் ரீமேக்கில் தனுஷை நடிக்க வைக்க ரஜினிகாந்த் முயற்சி செய்து வருகிறாராம்.

ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படமான பாத்ஷா சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தைப் பார்த்த ரஜினி ரொம்பவே இம்பிரஸ் ஆகிவிட்டாராம். ரஜினி பாத்ஷாவை புகழ்ந்ததைப் பார்த்து அவர் தான் அதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் தனது மருமகன் தனுஷை நடிக்க வைத்தால் அவருக்கு ஒரு பெரிய ஹிட் கிடைக்குமே என்று நினைத்து அதன் உரிமையை வாங்க முயற்சி செய்து வருகிறாராம்.

பாத்ஷாவை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிடவும் ரஜினி திட்டமிட்டுள்ளாராம். தனது மாமனாருக்கு தன் மீது தான் எவ்வளவு அக்கறை. தனக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்று தனுஷ் நெகிழ்ந்து போயுள்ளாராம்.

 

இரண்டு பாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் 'வித்தையடி நானுனக்கு'!

இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்ற அறிவிப்போடு வருகிறது வித்தையடி நானுனக்கு.

பானுமுரளி - சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ராமநாதன் கே பகவதி.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "இது ஒரு சைக்கோ திரில்லர் படம். கதாநாயகன் கதாநாயகி என்று யாரும் இல்லை. இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. ஒரு ஆண், ஒரு பெண் இருவரைச் சுற்றியும் கதை நடக்கிறது.

a film with just two characters

பெண் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் செளரா சையத் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை மிகவும் சரளமாக எழுத, வாசிக்க மற்றும் பேசவும் திறன் பெற்ற நடிகை.

ஆண் கதாபாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டியதாகிவிட்டது... சில நடிகர்களை அணுகினோம்... அவர்களது தேதி ஒத்து வரவில்லை... வேறு வழியில்லாமல் நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டேன்...

நாயகன் - நாயகி இல்லை என்பதால் டூயட்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் இருக்கின்றன... எங்களது கதைக்கும் கிளாசிக்கான ரொமான்ஸ் சூழ் நிலைக்கும் ஏற்ற பாடலைத் தேடிய போது மகாகவி பாரதியின் 'பாயும் ஒளி நீ எனக்கு...' என்கிற பாடல் எங்களுக்காகப் பாடப்பட்டது போலவே இருந்தது. இது தவிர இரண்டு சிறிய பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே மாண்டேஜில் தான் படமாக்கியிருக்கிறோம்.

படத்தின் கதை என்ன..?

வீட்டை விட்டு ஓடி வரும் பெண்ணின் கார் பழுதாகி விடுவதால் வழியில் ஒரு ஆண் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கிறன். கார் நேராக கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் திகிலான சம்பவங்கள்தான் மீதிப் படம்.

முழுப் படத்தையும் முடித்து ரஃப் கட் பண்ணிய பிறகு படம் 2.45 மணி நேரம் ஓடியது. படம் முழுவதும் இரண்டு பேர் பேசும் வசனங்களையும் உணர்ச்சிகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் குறைத்து 1.40 மணி நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு விறு விறுப்பான சைக்கோ திரில்லராக கொண்டு வர இருக்கிறோம். விவேக் நாராயணின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரெண்டு நடிகர்கள் தாம் என்றாலும். ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், உடை என்று ஆரம்பித்து உதவி இயக்குனர் வரை கிட்டத்தட்ட 30 பேர் 25 நாட்கள் இரவு பகலாக உழைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தோம்," என்றார்.

மீடியா மர்ச்சென்ட்ஸ், ஐஎஸ்ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.

 

பெப்சியிலிருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகியது - ராதிகா தலைமையில் புதிய அமைப்பு!

Small Screen Producers Splits From Fefsi

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பில் (பெப்சி) இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகி கொள்கிறது. இனி சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்கி தனித்து இயங்குவோம் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் நேற்று காலை நடந்தது. சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பெப்சி தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

முடிவில், பெப்சி அமைப்பில் இதுவரை இணைந்து செயல்பட்ட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம், இனி பெப்சி அமைப்பில் இருந்து விலகி கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியில், "கடந்த 2 நாட்களாக பெப்சி அமைப்பு தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னறிவிப்பு எதுவும் இன்றி சின்னத்திரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டார்கள்.

சீரியல் தயாரிப்பது என்பது தினசரி பத்திரிகை நடத்துவது மாதிரி. தினமும் படப்பிடிப்பு நடத்தி சேனலில் ‘டேப்' கொடுத்தால்தான் சீரியல்களின் ஒளிபரப்பு தடையில்லாமல் தொடரும். இப்படி திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களால் சேனலுக்கு குறித்த நேரத்தில் டேப்பை கொடுக்க முடியாமல் போய் விடுகிறது. அதனால் சேனலுக்கு தயாரிப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

எனவே இந்த மாதிரியான நிலைமை இனியும் தொடராமல் இருக்க சின்னத்திரைக்கென புதிய அமைப்பை தொடங்குவது குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். இதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதற்கான ஆக்கபூர்வ வேலைகள் தொடங்கவிருக்கிறது.

இந்த முடிவில் எங்களோடு சின்னத்திரையின் இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம், அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கமும் கைகோர்த்திருக்கிறது.

இது திடீர் முடிவு அல்ல. இந்த முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை. திடீர் திடீரென பெப்சியால் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது தயாரிப்பாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது நான் தயாரித்து வரும் ‘வாணி ராணி' தொடருக்கு நாளைக்கு கொடுக்க என்னிடம் ‘டேப்' கிடையாது. பெரிய தயாரிப்பாளரான என் போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால், சிறிய தயாரிப்பாளர்களின் நிலை என்ன? தொடர்களில் பணியாற்றுகிறவர்களின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிக்கப்படத்தானே செய்யும்.

கடந்த 19-ந்தேதியும் இதுமாதிரி திடீரென படப்பிடிப்பை நிறுத்த சொன்னார்கள். இப்படி அடிக்கடி படப்பிடிப்பு நிறுத்தப்படும்போது எங்களுக்கு ஏற்படும் சிக்கலை பெப்சி தலைவரிடம் நானே ஒரு முறை போனில் பேசி தெரிவித்தேன். கடிதம் அனுப்பியும் எங்கள் நிலையை விளக்கினோம். ஆனாலும் ஸ்டிரைக் தொடரவே செய்கிறது.

இதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறோம்.

தமிழ் சின்னத்திரைக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி கொண்டு அதில் எல்லாரும் இணைந்து வேலை செய்யவிருக்கிறோம். இதற்காக 7 கமிட்டி ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கொடுத்து செயல்படுத்த இருக்கிறோம்.

ஏற்கனவே கர்நாடகம், கேரளா, ஆந்திராவிலும் இம்மாதிரி சின்னத்திரைக்கென தனி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஒரே நேரத்தில் பல்வேறு சேனல்களுக்குமாக 38 சீரியல்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒவ்வொரு சீரியலிலும் சுமார் 200 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தனை பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இது முடிந்த முடிவு. எங்களால் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் போகமாட்டோம்,'' என்றார்.

முன்னதாக நிறைவேறிய பொதுக்குழு தீர்மானத்தில், பெப்சியில் இருந்து விலகல் தீர்மானத்தை தொடர்ந்து, மொழிமாற்ற தொடர்கள் சில சேனல்களில் ஒளிபரப்பாகி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

எப்படியோ, தயாரிப்பாளர்கள் தங்களின் பெரும் வில்லனாகப் பார்க்கும் பெப்சியை உடைப்பதற்கான முதல் அடியை நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமார் எடுத்து வைத்துள்ளார் என்பதுதான் கோடம்பாக்க டாக்!

 

தங்க மீன்களுக்கு யு சான்று- சென்சார் குழு பாராட்டு

Thanga Meengal Gets Clean U Certificate

ராம் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் தங்க மீன்கள் படத்துக்கு எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது சென்னை தணிக்கை குழு.

கற்றது தமிழ் மூலம் அறிமுகமான ராம், சில ஆண்டுகள் கழித்து, அப்பா - மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தங்க மீன்கள்.

முதல் படமான கற்றது தமிழ் வணிக ரீதியில் சுமார் என்றாலும், அந்தப் படம் தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இப்போது தங்க மீன்கள் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநர் ராம் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக வரும் தங்க மீன்கள் படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர்.

வெகுவாகப் பாராட்டிய தணிக்கைக் குழு உறுப்பினர்கள், இந்தப் படத்துக்கு எந்த வெட்டோ, ஆட்சேபமோ தெரிவிக்காமல் யு சான்று அளித்தனர்.

விரைவில் படம் திரையைத் தொடவிருக்கிறது.

 

பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் 49 வயதில் மரணம்!

Rituparno Ghosh National Award Winning Filmmaker Dies

கொல்கத்தா: பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் 49 வயதில் கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

கணைய பாதிப்பால் அவதிப்பட்ட அவர், மாரடைப்பால் மரணத்தைத் தழுவியதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் 1963-ம் தேதி பிறந்தவர் ரிதுபர்னோ கோஷ். இவரது தந்தை ஒரு டாக்குமென்டரி பட இயக்குநர். தாயாரும் திரைத் துறையைச் சேர்ந்தவரே.

1994-ல் ஹிரேர் அங்டி என்ற வங்க மொழி படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் ரிதுபர்னோ கோஷ். அதே ஆண்டில் யுனிஷே ஏப்ரல் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும், அதில் நடித்த தேபஸ்ரீ ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தன.

அதன் பிறகு ரிதுபர்னோ கோஷ் இயக்கிய அத்தனை படங்களும் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் ஆண்டு தோறும் விருது பெறுவது வழக்கமாகிவிட்டது.

ரிதுபர்னோ கோஷ் படமா... இந்த ஆண்டு நிச்சயம் ஒரு தேசிய விருது உண்டு எனும் அளவுக்கு மிகச் சிறந்த படங்களை அவர் உருவாக்கினார்.

இதுவரை அவர் 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் இரண்டு இந்திப் படங்கள், மற்றவரை வங்காளப் படங்கள். இவற்றில் 16 படங்கள் 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன!

அபோஹோமன் என்ற படத்துக்காக ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

இயக்கத்தோடு நில்லாமல், நான்கு படங்களிலும் நடித்துள்ளார் ரிதுபர்னோ கோஷ். அவற்றில் ஒரு ஒரிய மொழி படமும் அடங்கும்.

49 வயதில் அகால மரணத்தை ரிதுபர்னோ கோஷ் தழுவியிருப்பது இந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையற்ற வார்த்தைதான்.

பெருமளவு படங்களை அவர் வங்க மொழியில் உருவாக்கினாலும் அவற்றின் தாக்கம் இந்தியா முழுக்க விரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Read in English: Director Rituparno Ghosh passes away
 

ஏய் புருஷா.. ஞாபகம் இருக்கா... 'படம்' அனுப்பி கணவரை சீண்டிய நடிகை!

லாஸ் ஏஞ்சலெஸ்: வேலை வேலை என்று எப்பப் பார்த்தாலும் பிசியாக இருந்த கணவரை வழிக்குக் கொண்டு வர தன்னுடைய நிர்வாணப் படங்களை அவருக்கு மெசேஜ் செய்து கிளுகிளுப்பூட்டியுள்ளார் அமெரிக்க நடிகை மில்லா ஜோகோவிச்.

ஹாலிவுட் நடிகையான மில்லாவின் கணவர் பால் ஆண்டர்சன். இவர் திரைப்பட இயக்குநர் ஆவார். எப்பப் பார்த்தாலும் தனது கணவர் பிசியாக இருப்பதையும், அடிக்கடி தன்னுடன் தங்காமல் ஷூட்டிங் ஷூட்டிங் என்று பறந்ததாலும் கவலைக்குள்ளானார் மில்லா.

milla jovovich sends photographs to lift

சரி கணவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று யோசித்துப் பார்த்த அவருக்கு நூதனமான ஒரு ஐடியா தோன்றியது. உடனே தனது நிர்வாணப் படங்களை சேகரித்தார். அவற்றை மெசேஜ் மூலமாக கணவருக்கு அனுப்பி வைத்தார்.

இதைப் பார்த்து பால் சிரித்தாரே தவிர உடனே கிளம்பி ஓடி வரவில்லையாம். மாறாக அவரும் பதிலுக்கு நான் ஸ்பாட்டில் இருக்கேன், ரொம்பப் பிசி என்று பதில் மெசேஜ் அனுப்பி மில்லாவை மேலும் சூடாக்கினாராம்.

நல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி...!

 

சாந்தனு பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: காவல் ஆணையரிடம் புகார்

Fake Facebook Id My Name Santhanu

சென்னை: சாந்தனு என்ற தன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்வேறு மோசடிச் செயல்கள் அரங்கேறி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையரிடம் சாந்தனு பாக்யராஜ் இன்று புகார் அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் சித்து பிளஸ் டூ, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களின் மூலம் பிரபலம் ஆனார்.

இன்று சென்னை காவல் ஆணையரைச் சந்தித்த, சாந்தனு புகார் மனு ஒன்றைக் அளித்தார். அதில், அவர் ரியாஸ் என்பவரைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், புகாரில் சாந்தனு கூறியுள்ளதாவது...

'என் பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றைத் துவக்கி, அதன் மூலம் மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசச் செய்தி அனுப்புவது, பணம் வசூல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் இப்புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

சிம்புவின் திருமணம் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சாம்!

My Marriage Is Almost Done Simbu

சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்க்கிறார்கள் என்று பேச்சு அடிபட்ட நிலையில் அவர் புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

சிம்புவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சிம்பு சம்மதத்துடன் பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறது. அவருக்கு வேலூரில் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் அவரைப் பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் சிம்புவிடம் அண்ணா, உங்களுக்கு கல்யாணம் எப்பொழுது என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிம்பு அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரகசிய திருமணமா அல்லது பெண்ணை முடிவு செய்து விட்டீர்களா?

பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட சிம்பு தற்போது ஆன்மீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்!

Vijay Praised Director Vincent Selva

துள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய்.

விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா.

ஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு.

ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார்.

"கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததாகவே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..," என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

தொழிலதிபரை மணந்த நடிகை நீபா!

Actress Neepa Marries Industrialist

சென்னை: நடிகை நீபாவுக்கும் தொழிலதிபர் சிவகுமாருக்கும் இன்று திருமணம் நடந்தது.

‘காவலன்', ‘பெருசு', ‘பள்ளிக்கூடம்', ‘தோட்டா', ‘கண்ணும் கண்ணும்', ‘அம்முவாகிய நான்' உள்பட பல படங்களில் நடித்தவர் நீபா. சின்னத்திரை தொடர்களிலும் ‘மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்.

இவரது அம்மா மாலினி அப்பா வாமனும் நடன அமைப்பாளர்களாக உள்ளனர். மாலினி பல படங்களில் நடித்துள்ளார்.

நீபாவுக்கும் வேலூரைச் சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் சிவக்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நீபா-சிவக்குமார் திருமணம் சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்ரீலட்சுமி பிரசன்னா மகாலில் இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. திரையுலகினர் ஏராளமாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில் நடக்கிறது.

 

மடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு!

சென்னை: "மடிசார் மாமி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், 'இப்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் திரைப்பட தணிக்கை வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது' என்றும் சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துளற்ளது.

"மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் "மடிசார் மாமி' என்ற திரைப்படத்தை 'ஷில்பா மோசன் ஒர்க்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

பிராமண சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் நிறைந்துள்ள அந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,' என்று கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என்.கிருபாகரன், 'மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை (மே 27) உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், "நமது பழைய திரைப்படங்களில் உன்னதமான மனித உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற உயரிய கருத்துகளை தூக்கிப் பிடிக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. பழைய திரைப்படப் பாடல்கள் மனித வாழ்வின் மகத்துவத்தைப் போற்றுவதாக, தேச பக்தியை வளர்ப்பதாக, சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருந்தன.

அந்தப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக, தங்கள் ரசிகர்கள் மனதில் நல்ல கருத்துகளைப் பதியச் செய்யும் சிறந்த முன்மாதிரிகளாக நடித்தார்கள். தமிழ்த் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு 5 முதல்வர்களை தரும் அளவுக்கு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க ஊடகமாக திரைப்படங்கள் உள்ளன.

ஆனால், தற்போது வெளிவரும் திரைப்படங்கள் சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. நாம் விரும்பியதை அடைவதற்காக சட்ட விரோதமான, வன்முறைகள் நிறைந்த, ஒழுக்கக் கேடான பாதையில் சென்றாலும்கூட அதில் தவறில்லை என்ற கருத்தை முன்னிறுத்துவதாக இன்றைய பல திரைப்படங்கள் உள்ளன. படத்தின் தலைப்புகள்கூட மோசமாக உள்ளன.

திரைப்படம் என்பது வியாபாரமாக இருந்தாலும்கூட, திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள், அந்தத் திரைப்படங்களில் நடிப்பவர்கள், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவினர் போன்றவர்களுக்கு மிகப் பெரும் சமூகப் பொறுப்புணர்வு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

இந்த வழக்கில் 'மடிசார் மாமி' என்ற திரைப்படத்தில் பிராமணர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும், எனினும் படத்துக்கு தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சகிப்புத் தன்மை என்பது நாளுக்கு நாள் குறைந்து, ஒவ்வொரு பிரிவினரும் உணர்ச்சிகளுக்கு எளிதில் வயப்படுவர்களாக மாறி வரும் சூழலில், திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் தணிக்கை வாரியத்தின் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் தணிக்கை வாரியம் என்ற ஒரு அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

ஒரு திரைப்படத்தை எவ்வாறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதற்கு சினிமா சட்டத்தில் ஏராளமான விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும்கூட வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகளோடு வெளியாகும் திரைப்படங்களால் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு பற்றி சந்தேகம் எழுகிறது.

ஆகவே, இன்றைய நவீன திரைப்படங்களை ஒழுங்குபடுத்தும் விதத்தில் சினிமா சட்ட விதிகளில் போதுமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. மேலும், அரசியல் சார்பு இல்லாத, தகுதியான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்களையே தணிக்கை வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தமது தரப்பு கருத்தை தெரிவிக்க வேண்டும்.

மடிசார் மாமி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனினும் படத்தை தயாரித்தவர்கள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டு வெளியிடலாம். வழக்கின் விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது," என்று கூறியுள்ளார்.

 

விஸ்வரூபம் 2 அக்டோபரில் ரிலீஸ்!

Kamal S Viswarooam 2 Release October

கமல் ஹாஸன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று அறிவிப்போடு 'விஸ்வரூபம்' படத்தை முடித்திருந்தார் கமல். ஏற்கெனவே கணிசமான காட்சிகளை படமாக்கியும் வைத்திருந்தார். மீதிக் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்.

மேலும் சில நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார் கமல்.

ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல்.

தாய்லாந்து படப்பிடிப்பில் கமலுடன் ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தினை அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்றால் தீபாவளிக்கு வெளியாகக் கூடும்.

 

ரூ 19 கோடி மோசடி: பிரபல மலையாள நடிகை லீனா மரியா காதலனுடன் பண்ணை வீட்டில் கைது!

டெல்லி: சென்னையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பிரபல நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலனை டெல்லி மற்றும் சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து ஆயுதங்கள், சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.

தேசிய விருது பெற்ற ரெட் சில்லிஸ் மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கேப், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கோப்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

cheating case starlet leena maria paul held

இவரது காதலன் பெயர் பாலாஜி. பல்வேறு மோசடிப் புகார்களில் இவர் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இவருடன் சேர்ந்து லீனாவும் மோசடியில் ஈடுபட்டதாக பிரிவு 420, 120பி, 406 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அப்போதுதான் இருவரும் டெல்லி அருகே பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

6 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, லீனா - பாலாஜியை கைது செய்தது.

அப்போது அவர்களிடம் 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 9 சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கைகடிகாரங்களை கைப்பற்றினர்.

சென்னையில் ரூ 19 கோடியை மோசடி செய்ததாக பாலாஜி - லீனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 76 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் இவர்கள் இருவர் மீதும் உள்ளது.

 

அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு தகராறு செய்யும் அளவுக்கு நான் கீழ்த்தரமானவள் அல்ல! - த்ரிஷா

Trisha Denies Report On Her Clash For Separate Room

சென்னை: வெளிநாட்டுப் படப்பிடிப்பின்போது என் அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு நான் தகராறு செய்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை. அந்த அளவு கீழ்த்தரவமானவள் இல்லை நான், என்றார் நடிகை த்ரிஷா.

சுவிட்சர்லாந்தில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பின்போது த்ரிஷாவின் அம்மாவுக்கு தனியாக ரூம் ஒதுக்கவில்லை என்று த்ரிஷா தகராறு செய்ததாக தகவல் வெளியானது.

தனி ரூம் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமலிருந்தார் த்ரிஷா.

இப்போது படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய த்ரிஷா இதுகுறித்து வாய்திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், " சுவிட்சர்லாந்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து படப்பிடிப்பையும் ஒரு விளம்பரப் படத்தையும் முடித்துக் கொடுத்தவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். நான் எந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன் என்பதை படப்பிடிப்புக் குழுவினரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

என் அம்மாவுக்கு நான் தனி ரூம் கேட்கவே இல்லை. அப்படி கேட்டு தகராறு செய்யும் அளவுக்கு நான் கீழ்த்தரமானவள் இல்லை," என்றார்.

 

பால்கே விருது போல தமிழில் நடராஜ முதலியார் விருது வழங்க வேண்டும்! - பாலு மகேந்திரா

Balu Mahendra Urges Set Up Nataraja Mudhaliyar Award

சென்னை: இந்திய அளவில் பால்கே விருது வழங்கப்படுவது போல, தமிழில் நடராஜா முதலியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார்.

மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'செலுலாய்ட்' என்ற பெயரில் மலையாள இயக்குநர் கமல் இயக்கியுள்ளார்.

இதில், பிருதிவிராஜ்-மம்தா நடித்துள்ளனர். இந்த படத்தை 'ஜே.சி.டேனியல்' என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசுகையில், "தமிழ் சினிமாவில் முன்னோடிகளை மதிக்கும் பண்பு குறைந்து வருகிறது. மலையாள சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் ஜே.சி.டேனியல், ஒரு தமிழர். அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், இந்திய சினிமா நூற்றாண்டை பெருமைப்படுத்தும் விதமாகவும், கமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

சினிமாவில் நுழைந்த என்னை 14 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து வளர்த்து விட்டது, மலையாள சினிமாதான். அந்த நன்றி எனக்கு எப்போதும் உண்டு. மலையாள சினிமா அதன் தந்தை டேனியலை கொண்டாடுவது போல், தமிழ் சினிமா அதன் பிதாமகன் நடராஜ முதலியாரை கொண்டாட வேண்டும்.

வட இந்தியாவில் பால்கே விருது வழங்குவது போல் தமிழ்நாட்டில் நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்க வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னோடிகளை போற்றும் அதே நேரத்தில், பழைய சினிமா படங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக, சினிமா ஆவண காப்பகம் ஒன்றை நிறுவ வேண்டும்.

இதை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். காரணம், நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் இயக்கிய மூன்றாம் பிறை, மறுபடியும், சந்தியாராகம், வீடு ஆகிய படங்களின் 'நெகட்டிவ்'கள் அழிந்து விட்டன. இதுபோல் பல அரிய படங்களின் 'நெகட்டிவ்'களை நாம் இழந்து வருகிறோம். இந்த இழப்புகளை தடுக்க, உடனடியாக ஆவண காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

அண்ணா முதல் அம்மா வரை தமிழ்நாட்டை ஆள்பவர்கள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் இதை செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்? இது ஒன்றும் பெரிய பணி அல்ல. ஒரு அலுவலகமும், 10 பணியாளர்களும் போதும்," என்றார்.

யார் நடராஜ முதலியார்?

தமிழ் சினிமாவின் தந்தை இவர்தான். வேலூர்தான் இவர் சொந்த ஊர். தமிழின் முதல் படமான கீசக வதத்தை ரூ 35000 செலவில் எடுத்து 1916-ல் ஊமைப்படமாக வெளியிட்டு, அனைவரையும் அதிர வைத்தவர். 1916-ம் ஆண்டு இந்தத் தொகை எவ்வளவு பெரிய தொகை என்பதை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னையில் வெயில் அதிகம் என்பதால், ஏசி வசதி இல்லாத அந்த நாளில் பெங்களூரில் சொந்தமாக லேப் நிறுவியுள்ளார். பின்னர் வேலூரில் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவி தன் படங்களை அங்கு வைத்து பிரின்ட் போட்டு புரட்சி செய்த சாதனையாளர்.

1917 முதல் 1921 வரை திரௌபதி வஸ்திரபரனம், மைத்திரேயி விஜயம், லவ குசா, மஹிரவனன், மார்க்கண்டேயன், கலிங்க மர்தனம், ருக்மணி கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார். இந்தப் படங்களின் ப்ராசஸிங் பெரும்பாலும் அவரது வேலூர் ஸ்டுடியோவிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் - இந்தியில் படமாகும் ஏஆர் ரஹ்மான் கதைகள்!

Rahman Now Turns Script Writer

சென்னை: ஏ ஆர் ரஹ்மான் எழுதியுள்ள இரண்டு கதைகள் இப்போது தமிழ் மற்றும் இந்தியில் படங்களாகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இசையமைப்போடு, கதை எழுதுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

சும்மா மனம் போன போக்கில் எழுதவில்லை அவர். இதற்கென அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி ஒரு கோர்ஸ் படித்துள்ளார். ஹாலிவுட் படங்களின் இயக்குநர்களுடன் திரைக்கதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் இரு கதைகளை எழுதி முடித்து, அதற்கான திரைக்கதையையும் உருவாக்கியுள்ளார். இந்தக் கதைகளை சில இயக்குனர்களிடம் சொன்னபோது, ரஹ்மானைப் பாராட்டியதோடு படமாக்கவும் முன்வந்தனர். தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

இப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.

தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் இப்படங்களை எடுக்கிறார் ரஹ்மான்.

 

கேன்ஸ் விழாவுக்கு ஏன் போகவில்லை கோச்சடையானும் ரஜினியும்? - தயாரிப்பாளர் விளக்கம்

Why Rajini Cancels His Cannes Plan

மும்பை: கோச்சடையான் ட்ரைலரை இன்னும் சிறப்பாக உருவாக்கிய பிறகே சர்வதேச விழா ஒன்றில் வெளியிட வேண்டும் என்பதாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி கேன்ஸ் விழாவுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார், என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படத்தின் முதல் முன்னோட்டக் காட்சியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில், உலகின் முக்கிய படைப்பாளிகள் மத்தியில் திரையிட வேண்டும் என படக்குழுவினர் விரும்பினர். ரஜினியும் இதற்கு முதலில் ஒப்புக் கொண்டார்.

ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டிய ரஜினி, 'இந்த ட்ரைலர் நன்றாகத்தான் உள்ளது. நிச்சயம் பெரிய மைல்கல்லாக அமையும். ஆனால் இந்தப் படம் மூன்று ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம். சர்வதேச விழாவில் திரையிடுகிறீர்கள். எனவே இன்னும் சிறப்பாக தயார் செய்யுங்கள்," என்று கூறினாராம்.

ஆனால் அப்படி தயார் செய்ய காலதாமதமாகிவிட்டதால், தனது கேன்ஸ் பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டாராம்.

ஆனால் வெளியில் பிரான்ஸ் செல்லும் அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இடம்தரவில்லை என்பதுபோல சிலர் கிளப்பிவிட்டனர்.

இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் முரளி மனோகர், "இது முற்றிலும் மடத்தனமான கற்பனை. ரஜினி ஒரு ஆண்டுக்கு முன்பே உங்களையும் என்னையும் போல மிக நல்ல ஆரோக்கியமடைந்துவிட்டார். ரஜினியின் புகழை சிதைப்பதாக நினைத்து தம்மைத் தாமே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள் இதுபோன்ற செய்தியைப் பரப்புபவர்கள்.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா... கோச்சடையான் ட்ரைலர் பார்த்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், இன்னும் கூட சிறப்பாக இந்த ட்ரைலரை உருவாக்கலாமே என யோசனைகள் சொன்னார். எனவே அவசர கோலத்தில் எதுவும் செய்யாமல், கொஞ்சம் பொறுமையாக இந்த ட்ரைலரை உருவாக்குமாறு ரஜினி கூறியதால், நாங்கள் கேன்ஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ட்ரைலரை சிறப்பாக உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.

கேன்ஸ் ரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வேறு சர்வதேச நிகழ்வுகள் நிறையவே உள்ளன. அதில் ட்ரைலரை வெளியிடுவோம். இன்னும் 10 நாட்களில் பிரமாதமான ட்ரைலர் தயாராகிவிடும். இந்தப் படத்துக்கு ஏராளமான உழைப்பும் அபரிமிதமான ஆற்றலும் தேவைப்படுகிறது. ரஜினி சாரின் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றைத் தந்துவிட முடியாது. இருப்பதிலேயே சிறப்பான படைப்பால்தான் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்," என்றார்.

 

39வது பிறந்த நாள்... 3900 பேருக்கு உதவி!- நடிகர் விஜய் திட்டம்

Vijay Fans Planning Big Celebrate His 39th Bday

சென்னை: தனது 39வது பிறந்த நாளன்று 3900 பேருக்கு உதவிகள் வழங்கப் போகிறாராம் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ம் தேதி வருகிறது. இதற்காக இப்போதே அவரது ரசிகர் மன்றத்தின் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் பிறந்த நாளை சென்னையில் ஒரு மாநாடு மாதிரி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் பாடல்களை ஜூன் 22 காலையில் வெளியிடுகின்றனர்.

அன்று மாலை ஜூன் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்ட மேடை அமைத்து, 3900 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் போகிறார்களாம்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். ரசிகர்களிடமிருந்தும் நிதி திரட்டும் வேலை நடப்பதாகத் தெரிகிறது.

கடைசியாக விஜய் கலந்துகொண்ட இரு இலவச திருமண உதவித் திட்ட விழாக்கள் படு சொதப்பலாக மாறின. காரணம் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு மற்றும் போதிய பாதுகாப்பின்மை. எனவே இந்த நிகழ்ச்சியை பக்காவாக திட்டமிட்டுள்ளார்களாம். முதல்முறையாக ரசிகர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து தொண்டர் படை போல ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்களாம்.

தொண்டர் படையே தொந்தரவுப் படையாக மாறாமலிருக்கணுமே!!

 

நயன்தாரா வாய்ப்பை தட்டிப்பறித்தேனா? ஹன்சிகா

Fight With Nayanthara Explains Hansika

சென்னை: நயன்தாராவுடன் தான் மோதலில் ஈடுபட்டதாக வரும் தகவல்கள் குறித்து ஹன்சிகா விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா பிரபுதேவாவுடன் நெருக்கமானதால் தான் நயன்தாரா பிரிய நேரிட்டது என்றெல்லாம் ஒரு காலத்தில் பேச்சு அடிபட்டது. அய்யய்யோ பிரபுதேவா என் அண்ணன் மாதிரி என்று ஹன்சிகா அலறினார். அதன் பிறகு நயன், பிரபு அவரவர் வழியைப் பார்த்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ஹன்சிகா நயன்தாராவை குறி வைத்து அவரது பட வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாக செய்தி வந்தது. இது குறித்து அறிந்த நயன் ஹன்சிகா மீது கோபப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,

நான் நயன்தாராவின் பட வாய்ப்புகளை தட்டிப்பறிக்கவே இல்லை. அவரும் என் மீது கோபப்படவில்லை. அவருக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் கூட அதை என்னிடமே தெரிவித்திருந்திருப்பார். நான் யார் மீதும் கோபப்படவே மாட்டேன். நான் நேர்மையானவள் என்றார்.

Hansika told that she didn't snatch Nayanthara's movie offers. Nayanthara was not angry with me, she added.

 

பெப்சி திடீர் ஸ்ட்ரைக்- படப்பிடிப்புகள் முடங்கின!

Fefsi Strike Affects 28 Movie Shooting

சென்னை: பெப்சி தொழிலாளர்களின் திடீர் ஸ்ட்ரைக் காரணமாக இன்று அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கின.

பெப்சி பொருளாளர் அங்கமுத்து சண்முகத்தை நேற்று சிலர் தாக்கிவிட்டனர். சினிமா டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள்தான் தன்னை தாக்கியதாக அங்கமுத்து சண்முகம் குற்றம் சாட்டினார். பெப்சியின் மற்றொரு நிர்வாகி தனபாலும் தாக்கப்பட்டார்.

பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் 2 பிரிவுகளாக செயல்படுவதாகவும் எனவே கார் டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று பெப்சி பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இதனால் தன்னை டிரைவர் யூனியனை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் அங்கமுத்து சண்முகம் போலீசில் புகார் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ‘பெப்சி' தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சென்னையில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி', விஷால் நடிக்கும் ‘பட்டத்துயானை' படப்பிடிப்புகள் நடந்தன. தொழிலாளர்கள் வராததால் இவ்விருபடப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

இதுபோல் மேலும் 26 படப்பிடிப்புகள் இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெப்சி தொழிலாளர்கள் இன்று காலை கோடம்பாக்கம் டைரக்டர்கள் காலனியில் ஒன்றுகூடி, நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர்.

 

வசந்த பாலன் இயக்கும் காவியத் தலைவன் - பிருத்விராஜ் இன்னொரு ஹீரோ!

Prithviraj Joins With Vasantha Balan

சென்னை: காவியத் தலைவன் என்ற தலைப்பில் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் பிருத்விராஜா இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.

அரவான் படத்துக்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் படம் இது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் இந்த ஸ்க்ரிப்டை உருவாக்கி வந்தார்.

படத்தில் ஒரு ஹீரோவாக சித்தார்த் நடிப்பார் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இப்போது அடுத்த ஹீரோவாக ப்ருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாயகிகளாக லட்சுமி மேனன் அல்லது நஸ்ரியா நஸீம் நடிப்பார்கள் என தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. வசந்த பாலனுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவான் மாதிரி இந்தப் படமும் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

'அதெல்லாம் ஏழ வருஷத்துக்கு முந்தின படம்... இப்பப் போயி...!' - அலுத்துக் கொள்ளும் லட்சுமி ராய்

சென்னை: நானும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டவை.. இதை இப்போது பெரிது படுத்துவது வருத்தமாக உள்ளது என நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.

சூதாட்டப் புகாரில் சிக்கி சிறையில் உள்ள ஸ்ரீசாந்த்துடன் நெருக்கமாக இருந்த அத்தனை நடிகைகளும் சிக்கலுக்குள்ளாகி உள்ளனர்.

அத்தனை நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரம் முயற்சியில் உள்ளனர் போலீசார்.

lakshmi rai s explanation on her affair with sreesanth

இந்த நிலையில் லட்சுமிராயும் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இது தனக்கு எதிரான சதி என்று வருத்தப்பட்டுள்ளார் லட்சுமி ராய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது இன்டர்நெட்டில் வெளியாகியுள்ள படங்கள் எல்லாம் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர படத்துக்காக எடுக்கப்பட்டவை.

இதை இந்த நேரத்தில் இணைய தளங்களில் பரப்புவதும், பத்திரிகைகளில் வெளியிடுவதும் தவறானது. இந்த இக்கட்டான நேரத்தில் இப்படங்கள் வெளியாவதால் என் இமேஜ் பாதிக்கப்படும். நான் ஒரு பெண் என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது என் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

நான் ஐபிஎல் தூதுவராக இருந்ததால், தொழில் ரீதியாக அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றேன். ஒரு நடிகை என்ற முறையிலேயே ஸ்ரீசாந்துடன் அந்தப் படத்தில் நடித்தேன்.

வேறு வகையில் யாருடனும் எனக்கு தனிப்பட்ட தொடர்பில்லை," என்றார்.

 

காவி வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம், தெருவோரத்தில் ஓய்வு..! - இதுதான் இன்றைய சிம்பு!

Simbu Speaks More On Spirituality Than Movies

சென்னை: ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன் என்று நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

அறிவித்ததோடு நில்லாமல், ஆன்மீக வேடத்துக்கும் மாறிவிட்டார். தலையில் காவித்துண்டு கட்டிக் கொண்டு, சாதாரண உடையில் இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.

காவி வேட்டி கட்டி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து சாலையோரங்களில் அமர்ந்து, மக்களோடு ஓய்வெடுத்துள்ளார். புனிதமான சில மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தாராம் (பாபா குகைக்குப் போய் வந்தீங்களா?).

ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து அவர் கூறுகையில், "கடவுள் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துள்ளார். தேவையான அளவு பணமும் இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

இப்போது வேறு ஒரு உலகில் இருப்பதை உணர முடிகிறது. இனி பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. விரைவில் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுப்பேன்," என்றார்.

சினிமாவை விட ஆன்மீகம் பற்றிப் பேசுவதுதான் சிம்புவுக்கு இப்போது ரொம்பப் பிடித்திருக்கிறது.

இந்த சீஸன் எப்போ முடிவுக்கு வரப் போகுதோ...

 

நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாஸன்!

Shuthi Slips The Swimming Pool   

இந்திப் படப்பிடிப்பிபோது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார் பிரபல நடிகை ஸ்ருதிஹாஸன்.

இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ராமைய வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாஸன். ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார் ஸ்ருதி.

அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங்குக்கு வந்தார் ஸ்ருதி.

ராமையா வஸ்தாவைய்யா படத்தில் கிரிஷ் குமார், சோனு சூட், ரந்திர் கபூர், பூனம் தில்லான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபு தேவா இயக்குகிறார்.

 

குறும்பட இயக்குனர் புஸ்கின் ராஜா இயக்கும் 'நே'

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய அர்த்தமுள்ள வரவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன. திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருபவர்கள் இவர்கள். குறிப்பாக யாரிடமும் உதவியாளராக இல்லாமல் குறும்படங்கள் செய்து, பின் நேரடியாக திரைக்கு வருபவர்கள் இந்த படைப்பாளிகள்.

இந்தப் பட்டியலில் இடம்பெற வருகிறார் புஸ்கின் ராஜா. இவர் இயக்க இருக்கும் முதல் படத்துக்கு 'நே' என்று தலைப்பிட்டுள்ளார். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.

nay crime thriller from debutant debutant director
அது என்ன நே? நேயம், அன்பு, ஈரம், இரக்கம் என இதற்கு பல அர்த்ததங்கள் இருந்தாலும், எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதைதான் நே என்கிறார் இயக்குநர்.

'தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன. சிறுவர்கள் செய்யும் குற்றங்கள், தகாத உறவுகள், பாலியல் குற்றங்கள் பல தினம் தினம் நடக்கின்றன. அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள்தான் கதையின் அடிப்படை. மூன்று பேர் சம்பந்தப்பட்ட மூன்று சம்பவங்களின் தொகுப்புதான் இந்த த்ரில்லர் கதை," என்கிறார் புஸ்கின் ராஜா.

பொதுவான திரைக்கதை நெறிகளை பின்பற்றாமல் அதை உடைக்கும் வகையில் புதிய திரைக்கதை மொழியை உருவாக்க முயற்சித்து உள்ளாராம் புஸ்கின் ராஜா. இவர் இதற்கு முன்பு ஆக்க்ஷன் (Action) என்னும் குறும்படத்தை இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.

இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது
இந்தப் படத்துக்கு சாரு நிவேதிதா வசனம் எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர் வீரகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மாபியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ஜெனீவாவில் தில்லுமுல்லு, சுட்டகதை, நளனும் நந்தினியும் இசைவெளியீட்டு விழா!

சென்னை: வேந்தர் மூவிஸ் தயாரித்த தில்லு முல்லு உள்பட 3 படங்களின் இசை வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடக்கிறது. அத்துடன் எதிர்நீச்சல் படத்தின் வெற்றி விழாவையும் ஜெனீவாவில் நடத்துகின்றனர்.

வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘தில்லு முல்லு'. இது ரஜினி நடித்த ‘தில்லு முல்லு' படத்தின் ரீமேக். சிவா, இஷா தல்வார் நடித்துள்ளனர், பத்ரி இயக்கியுள்ளார்.

மேலும் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இரு படங்களை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.

3 tamil movies audio launch at geneva

இந்த மூன்று படங்களின் இசை வெளியீட்டை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடத்துகின்றனர்.

வேந்தர் மூவிஸ் வாங்கி வெளியிட்ட ‘எதிர்நீச்சல்' படம் படத்தின் வெற்றி விழாவையும் அத்துடன் சேர்த்து நடத்துகின்றனர்.

ஜெனீவாவில் உள்ள விக்டோரியா அரண்மனையில் ஜூன் 1 ம் தேதி இவ்விழா நடக்கிறது. இதில் இத்தாலிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் தமிழ் பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

இவ்விழாவுக்கு பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். தனுஷ், சிவகார்த்தி கேயன், பிரியா ஆனந்த், சிவா, பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ ராகவேந்திர விஜயம்…

தமிழகத்தில் அவதரித்து, தரணி போற்றும் ஜகத்குருவாய், மஹாபிரபுவாய், வந்தாரை வாழ வைக்கும் வள்ளலாய், நோய் தீர்க்கும் மருத்துவராய், ஏகாந்த புருஷராய் மந்த்ராலயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி ஸ்ரீ ராகவேந்திர விஜயம்.

மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த இடம், வளர்ந்த இடம், படித்த இடம், வாழ்ந்த இடம், வாழ்கிற இடம் மட்டுமின்றி அவரின் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் இந் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒரு மிருத்திகா பிருந்தாவன தரிசனம், மந்த்ராலய தரிசனம், பக்தர்களின் அனுபவங்கள், ஆன்மீக அறிஞர்களின் உரை, பிரபலமானவர்களுடன் உரையாடல்கள் இடம்பெறுகின்றன .

sri ragavendra vijayam on sri sankara tv

உலகில் உள்ள அனைத்து பிருந்தாவனங்களையும், வாரமொரு பிருந்தாவனமாக ஒளிபரப்பி, ஸ்ரீ ராகவேந்தரரின் புகழை, பாமரனும்

அறிந்து துன்பமில்லா வாழ்வு பெற, நல்வாழ்விற்கு வழிகாட்டும் ஆன்மீக நிகழ்ச்சி......

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிரும் இரவு 8.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒளிபரப்பாகிறது ஸ்ரீ ராகவேந்திர விஜயம்.

 

மாணவியைக் கடத்த முயன்ற வழக்கு: முன்ஜாமீன் கேட்டு சனா கான் மனு!

Sana Khan Seeks Anticipatory Bail

மும்பை: மாணவியைக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்படும் நடிகை சனா கான், முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.

பிரபல நடிகை சனா கான் தன் உறவுக்கார இளைஞர் காதலித்த 15 வயதுப் பெண்ணைக் கடத்த தூண்டுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சனா கானின் உறவினரான நாவெட், சான்பாடாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனால், அவருடனான தொடர்பை மாணவி துண்டித்தார்.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி மாலை, டியூஷன் முடித்து வீட்டுக்கு மாணவி திரும்பி கொண்டிருந்தபோது, சனா கானின் உறவுக்கார இளைஞனும் அவன் நண்பர்களும் மாணவியை காரில் கடத்த முயன்றனர்.

மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தபோது, அங்கு சனா கான் மாணவியின் தாயாருடன் கோபமாக வாக்குவாதம் செய்து தொண்டிருந்தாராம்.

இது பற்றி போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நாவெட், அவருடைய நண்பர்களை கைது செய்தனர். சனா கானை தேடி வந்தனர்.

ஆனால் சனா கானுக்கு சல்மான்கான் உள்ளிட்ட பெரும் புள்ளகள் ஆதரவளித்தனர். சல்மானின் மென்டல் படத்தில் சனாதான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு மும்பை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் சனா கான்.

 

விஜய்யிடம் பிரியாணியுடன் சென்று வெறுங்கையுடன் திரும்பிய வெங்கட்

Venkat Prepared Biriyani Vijay

சென்னை: பிரியாணி படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு முதலில் விஜய்யிடம் தான் தெரிவித்துள்ளார். அவர் மறுத்த பிறகே அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளதாம்.

வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது. அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் இளைய தளபதி விஜய்யிடம் தான் தெரிவித்தாராம். ஆனால் விஜய் அதில் நடிக்க ஒப்புக் கொள்ளாததால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.

கார்த்திக்கு கதை பிடிக்கவே அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மங்காத்தா ஷூட்டிங்கின்போது அஜீத் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்ததால் தனது படத்திற்கு வெங்கட் பிரியாணி என்று பெயர் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தின் கதைக்கும் பிரியாணி என்ற பெயருக்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விஜய் மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால் அடுத்தடுத்து 2 பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த பெருமை வெங்கட் பிரவுக்கு கிடைத்திருந்திருக்கும்.

 

தீயா வேலை செய்யணும் குமாரு Vs தில்லு முல்லு

வரும் ஜுன் 14-ம் தேதி இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே காமெடி படங்கள், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படங்கள்.

முதல் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. சித்தார்த், ஹன்சிகா மற்றும் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் சி. இதற்கு மேல் அறிமுகமே தேவையில்லை இந்தப் படத்துக்கு. சுந்தர் சி என்ற வார்த்தையே படத்தின் மினிமம் கியாரண்டிதான்!

theeya velai seyyanum kumaru vs thillu mullu    | தில்லு முல்லு  

யுடிவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு க்ளீன் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த படம் தில்லு முல்லு. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த க்ளாஸிக் காமெடிப் படமான பழைய தில்லுமுல்லுவின் ரீமேக் இது.

வேந்தர் மூவீஸ் தயாரிப்பான இந்தப் படத்தில் சிவா, பிரகாஷ் ராஜ், இஷா தல்வார் நடித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் ஜூன் 14-ம் தேதியை குறிவைத்து களமிறங்கத் திட்டமிட்டுள்ளன. ஆனால் விநியோகஸ்தர்களோ வேறு மாதிரி கணக்குப் போடுகின்றனர். இரண்டுமே பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள காமெடிப் படங்கள். இரண்டையும் ஒன்றாக இறக்குவதைவிட, ஒரு வாரம் முன்னே பின்னே களமிறக்கினால் பலமாக கல்லா கட்டலாமே என்பதுதான் அந்தக் கணக்கு!

 

ஹீரோ ஆசையை ஓரங்கட்டிட்டு இசையை கவனிப்பா: அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்

Rajini Timely Advice Anirudh

சென்னை: நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் இசையில் மட்டும் கவனம் செலுத்துமாறு கொலவெறி புகழ் அனிருத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.
ஒல்லிக் குச்சியாக இருக்கும் அவரிடம் யாரோ தனுஷ் மாதிரி நீங்களும் பெரிய ஹீரோவாகலாம் என்று தூபம் போட்டுள்ளார். உடனே அவருக்கு ஹீரோ ஆசை வந்து சான்ஸ் தேட ஆரம்பித்தார். இந்நிலையில் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு பட நிறுவனம் முன்வந்துள்ளது. கதை விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது.

பெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட் வாங்க நடையாக நடந்து அலுத்துப் போன இயக்குனர்களின் பார்வையும் அனிருத் பக்கம் திரும்பியிருக்கிறது. இது குறித்த தகவல் காத்து வாக்கில் ரஜினியின் காதுகளுக்கு சென்றது. அவர் உடனே அனிருத்தை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.

அவர் அனிருத்திடம் கூறியதாவது,

திரையுலகில் நம் ஆசையை விட சினிமா நம்மை எந்த பாதையில் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். சினிமா உன்னை இசைப் பாதையில் அழைத்துச் செல்கையில் நீ வேறு பாதையில் போக ஆசைப்படுகிறாய். இது உன் எதிர்காலத்தை வீணடித்துவிடும்.

நடிக்க வேண்டும் என்று தேவையில்லாமல் மனதை அலைபாயவிடாமல் இசையில் மட்டும் கவனம் செலுத்து. உனக்கு இருக்கும் திறமைக்கு நீ பெரிய இசையமைப்பாளர் ஆவாய் என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த அறிவுரை அனிருத்துக்கு பிடிக்காவிட்டாலும் அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளாராம். அதனால் நடிக்கலாமா, இல்லை இசையோடு நின்று கொள்ளலாமா என்று அனிருத் தீவிர யோசனையில் உள்ளாராம்.

 

மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்

தமிழ்த் திரையுலகம் எத்தகைய படங்களைச் செய்து பெரும் செல்வம் ஈட்டியது என்று ஆய்வோமானால் நிச்சயமாக அது ரத்த உறவுகளுக்கிடையே நிகழும் பாசப் போராட்டங்களைச் சித்தரித்த படங்களால்தான். பிற்காலத்தில் ‘செண்டிமென்ட் படங்கள்' என்று அவற்றை எளிதாகத் தரம்பிரித்துப் வைத்தாலும் அவ்வகைமைப் படங்கள் அன்றின்று என்றில்லாமல் எல்லாக் காலத்திலும் வெளியானபடியே இருந்திருக்கின்றன.

எளிமையான மனித மனங்கள் அறிவைப் புறந்தள்ளி உணர்வின் வழியே உருகியோடிய தருணங்களை மிகச் சிறப்பாகவே எடுத்தாண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்து ஆட்டிப்படைத்தன அவை.

a poet s tribute late legend tms

இளமை முறுக்கத்திலுள்ள பார்வையாளனுக்கு காதல் கதைகளும் அடிதடி சாகசப் படங்களும் இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்குப் பாசப் பெருக்கில் பாத்திரங்கள் நிகழ்த்தும் உரையாடல்களும் நாத்தழுதழுப்பான சொல்லாடல்களும் புரியக்கூடிய அகவைப் பக்குவம் ஏற்பட்டிருப்பதில்லை. ஒரு செண்டிமெண்ட் காட்சி தோன்றினாலே இன்று பலர் ‘பொறா ஊளை' இடுகின்றனர்.

திரையரங்கப் பார்வையாளர்களாக அவ்வினத்தவர்களே எஞ்சியிருப்பதால், இனிமேலான காலங்களில் பாலூட்டி இனங்களுக்கே சிறப்பாய் உரிய பாச உணர்ச்சியைப் பேசுபொருளாகக் கொண்டு உள்ளத்தைப் பதைபதைக்க வைக்கும் உறவுகளின் கதைகளைக் கூறும் படங்கள் தோன்றக்கூடும் என்று எந்த உறுதியுமில்லை. அது வேறொரு வடிவமெடுத்து இன்று எல்லார் வீட்டுக் கூடங்களிலும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களாகி இருக்கின்றது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாக்களைக் காண அரங்கை நாடி நிறைத்த கூட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆகியிருந்தது. பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக திருவிழாக்களுக்குச் சென்றார்கள். மாமன் மச்சான் சித்தி பெரியம்மா அத்தை வீடுகளுக்குச் சென்றார்கள். திரைப்படங்களுக்குச் சென்றார்கள். எல்லார் இதயங்களும் ஒன்றோடு ஒன்று உறவுக் கயிற்றால் இறுகப் பிணைந்திருந்தன. தாத்தா பாட்டி தொடங்கி பேரன் பேத்திகளாலாகிய ஒரு குடும்பத்தில் சாதாரணமாக பத்துப் பதினைந்து நபர்கள் கூடி வாழ்ந்தார்கள். எல்லாருக்கும் மூத்தோரின் சொல் கைவிளக்காக இருந்தது. உறவுகளுக்கிடையில் நிதமும் கண்ணீர் ததும்பவைக்கும் ஒரு சம்பவம், சகித்துக்கொள்ளவே முடியாத சின்னச் சின்ன சச்சரவுகள், செரிக்கமுடியாத பிரிவுகள், மீண்டும் அன்பால் நெருங்கிக் கட்டித் தழுவிக்கொள்ளுதல் என்று நெஞ்சங்களுக்கிடையில் தங்கச் சரிகையிடப்பட்ட உணர்விழைகள் ஊடிப் பின்னியிருந்தன.

இன்று ஒரு குடும்பம் என்பது மூவர் அல்லது நால்வரால் மட்டுமே ஆகிய இரத்த உறவுகளின் சிற்றலகாகக் குறுகிவிட்டது. தந்தைமை தாய்மை என்பதை வெறும் ஒற்றைப் பிள்ளைப் பேற்றோடு முடித்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. அதுவே வாழ்க்கையைக் கொஞ்சம் பிய்த்தல் பிடுங்கல் இல்லாமல் வாழ்வதற்கும் மற்றவர்களோடு போட்டி போட்டு ஓடுவதற்கும் ஏற்றது என்ற கருத்தால் ஒற்றைப் பிள்ளைக் குடும்பங்கள் பெருகிவிட்டன. இரண்டுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை.

மகாபாரதத்தில் ஒரு சொற்றொடர் வரும். ‘ஒற்றைப் பிள்ளை மட்டுமே பெற்றவன் பிள்ளைப்பேறற்ற மலடனுக்கு எவ்விதத்திலும் மேலானவனல்லன்' என்பதே அது. எந்நேரத்திலும் மக்களைத் தாக்கக்கூடிய அக்காலத்தைய பேரிடர்களான நோய், போர், பஞ்சம் போன்றவற்றால் அந்த ஒரே பிள்ளையையும் எளிதில் பறிகொடுத்துவிட நேரலாம் என்பதால் அத்தொடரில் உண்மை இல்லாமலில்லை. ஆனால், பெற்றோருக்கு ஒரே பிள்ளையாய்ப் போய்விட்ட ஒரு குழந்தை, தன் வாழ்வில் அண்ணன் அக்காள் தம்பி தங்கை ஆகிய எந்த உறவுகளையும் அனுபவிப்பதில்லை. தாய் தந்தையற்ற குழந்தை எப்படி அநாதையாகக் கருதத் தக்கதோ அதேபோல் சகோதர சகோதரியற்ற குழந்தையும் போதிய உறவுகளற்ற அநாதையே.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழந்தொடர்தான் எத்துணை பொருள் மிக்கது! குழவிப் பருவத்திற்குத் தாயும், வளரும் பருவத்திற்குத் தந்தையும் எப்படி முக்கியமோ - அதற்கு நிகராக மீதமுள்ள வாழ்க்கைப் பருவத்திற்கு உடன்பிறப்புகள் முக்கியம். ஆனால், இன்றைய பிள்ளை உடன் பிறப்புகளற்று வாழ்கிறது.

சகோதரமற்ற நிலை அத்தோடு முடிவதில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி, அதற்கொரு பிள்ளை பிறந்தால் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் என்னும் உறவுக்கண்ணிகளே முற்றாக அறுந்து இன்னும் அதிக உறவிழப்புக்கு ஆளாகிப் பேரநாதையாக அல்லவா நிற்கும் ! உறவுகள் விடுபட்டு விடுபட்டு உருவாகும் தலைமுறைகள் மேலும் மேலும் அதிகத் தனிமையடைந்து மானுட ஆதார உணர்ச்சிகளே அற்றுப் போய்விடாதா ? எவ்வுணர்ச்சிகளோடு அந்தத் தலைமுறை தம் உலகை எதிர்கொள்ளும் ? எண்ணிப் பார்க்கவே கூசுகிறதே! இக்கூறுகளைத்தாம் சமூக மானுடவியல் ஆய்வாளர்கள் இன்னும் அதிக அழுத்தத்தோடு கூறுகிறார்கள்.

உறவுகளின் பெருமைகளையும் அவற்றின் ஊடு சரடுகளையும் மிகச் சரியாக எடுத்தாண்டு பேசிய தமிழ்த் திரைப்படங்கள் பிற்காலத் தலைமுறைக்கு வரலாற்று அதிர்ச்சியாக மாறி நிற்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அறுபதுகளில் வெளியான கறுப்பு வெள்ளைப் படங்கள் அந்தத் தடத்தில் அருமையாக நடை பயின்றிருக்கின்றன. உறவுகளின் உணர்ச்சி நிழல்களையும் பேரலைகளையும் இறுகப் பற்றி இயல்பு பிறழாமல் கதை சொன்ன நல்ல இயக்குநர்கள் நம்மிடம் இருந்திருக்கிறார்கள். பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், துரை, சேரன், தங்கர் பச்சான் போன்றவர்கள் அத்தகைய படங்களை விசாலமான தளங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களில் பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் இயக்கிய படங்களுக்குத் தனித்த அடையாளங்கள் உண்டு. அவருடைய இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘ப'கர வரிசைப் படங்கள் இன்றும் ஈர்ப்புக் குறையாதவை.

உறவுகள் என்னும் பூமடல்களில் உறைந்திருக்கும் உணர்ச்சித் துளிகளைச் சேகரிக்கும் வேலைதான் கலைஞர்களின் விருப்பம். நாமெல்லாம் உணர்ந்த, ஆனால், நம்மெவரும் அதன் உட்கட்டமைப்புகளில் தெளிவடையாமல் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்தை அவர்கள் தம் கலை ஊடகத்தின் வாயிலாகக் கட்டி எழுப்பும்போது நம்மை அறியாமல் நாம் கண்ணீர் உகுக்கிறோம். நமக்கும் இது நேர்ந்தது என்று நம்மையறியாமல் நாம் உருகுகிறோம். அதன் முடிவில் நாம் அடையும் ‘அந்த ஏதோ ஒன்று' நிச்சயம் பகுத்தறிவுக்கு உட்பட்டது அன்று... அது கண்டவர்கள் மட்டுமே நன்றுணரும் ஒருவகை ஆன்மீகம்.

அண்ணன் தங்கைப் பாசத்திற்கு நிகராக இவ்வுலகில் இன்னொன்று இல்லை. அப்படி ஒன்று இருந்தால் அது அக்காள் தம்பிப் பாசமாகத்தான் இருக்கமுடியும். சகோதரத்துவத்தின் அத்தனை ஒளிக்கதிர்களும் ஒன்றாகத் திரண்டு ஜுவாலையாகி ஒளிர்கின்ற தனித்துவமான உறவுநிலை அது. ஒரு வயிற்றுப் பிறப்பில் உதித்த இருவேறு பால் உயிர்கள். இன்றும் கூட, தம் சகோதரிகள் ஐவருக்கும் திருமணம் செய்துவைத்தாக வேண்டிய யாகத்தில் தம் வாழ்வை ஒருகணமும் எண்ணிப் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் அண்ணன், தம்பிகள் ஆயிரம். தன் அண்ணன் குறைவில்லாமல் வாழட்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்தைத் தன் கணவனுக்கே தெரியாமல் கையெழுத்திட்டுவிட்டுச் செல்லும் தங்கைகள் ஆயிரம். தூத்துக்குடியில் முத்தெடுக்க மூழ்குபவர்கள் தம் இடுப்பில் கட்டியிருக்கும் கயிற்று நுனியைத் தம் மனைவியின் சகோதரனிடத்தில் மட்டுமே ஒப்படைத்து மூழ்குவார்களாம். தன் மனைவியின் சகோதரனாகிய அவன் மட்டுமே தன் சகோதரிக்காகத் தன்னை மேலிழுத்து மீட்பான் என்னும் ஆதி நம்பிக்கை அது. அந்த நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை. இனியும் பொய்க்காது.

ஓர் ஆடவனுக்கு உலகிலுள்ள மற்ற மங்கைகள் வாசமலராக இருக்கக் கூடும். சகோதரி மட்டுமே அவனுக்குப் பாசமலர். ‘நீ அக்கா தங்கச்சி கூடப் பொறக்கல ?' என்னும் வசை வாள் கூர்மையான வசை.

Pasamalarபீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ‘பாசமலர்' திரைப்படம் அண்ணன் தங்கை உறவுக்கு இலக்கணம் வகுத்து இயம்பிய படம். இத்திரைப்படத்தைக் கண்ணுற்றிராத சென்ற தலைமுறையினர் ஒருவரும் இலர். தமிழர் வாழ்வோடு பிணைந்து இன்றும் உரையாடிக்கொண்டிருக்கும் உணர்ச்சிப் படங்களுள் இத்திரைப்படத்திற்கு முதன்மையான இடம் உண்டு.

தன் தங்கையைப் பேணி வளர்த்து ஆளாக்கும் அண்ணன். தன் அண்ணனுக்காகப் பாச உருவாய் வாழும் தங்கை. இருவரும் கூடியுழைத்து வாழ்வில் உயர்கிறார்கள். தங்கை தன் அண்ணனுக்கு எதிரான வர்க்க சிந்தனையுள்ள ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அண்ணனுக்கும் ஒருத்தி மனையாட்டி ஆகிறாள். புதிய மண உறவுகளால் அண்ணன் தங்கைக்கிடையே பாசத்தை மீறிய முரண்பாடுகள் முளைக்கின்றன. அண்ணனும் தங்கையும் முறையே பிள்ளைப் பேறடைகிறார்கள். தத்தம் குழந்தைகளைத் தாலாட்டும் தொனியில் தம் சகோதர உறவின் அருமை பெருமையை, உறவில் திளைத்து மகிழ்ந்திருந்த பழைய காலத்தை, இனி இந்தக் குழந்தைகளால் தாம் ஒன்று சேர்வதற்கு மிஞ்சியிருக்கும் நம்பிக்கையை இருவரும் பாடுகிறார்கள். இதுதான் திரையில் பாடல் இடம்பெறும் சூழல்.

கண்ணதாசன் தம் காதல் பாடல்களுக்காகவும் தத்துவப் பாடல்களுக்காகவும் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார். அவருடைய தத்துவப் பாடல்களுக்காகவோ நல்ல காதலுணர்ச்சிப் பாடல்களுக்காகவோ நான் அவரைப் பெரிதும் வியக்கவில்லை. அவருடைய தனிச்சிறப்பு என்பது வெகு சிக்கலான அபூர்வமான கதைத் தருணத்தைத் தம் உயிர்ப்பான தமிழ் வரிகளால் எள்ளளவும் கட்டுக்குலையாத சொற்களைக் கோத்து ஒட்டுமொத்தத் திரைப்படத்தையே உயரத் தூக்கி நிறுத்தும் மேதைமைதான்.

TM Soundararajanஇன்றைக்குப் பாட்டு எழுதக் கேட்கும் இயக்குநர்கள் பாடலாசிரியர்களை ‘சார்... கொஞ்சம் விசுவலா எழுதிக் கொடுங்க. உங்கள் வரியை வெச்சுத்தான் நாங்க விசுவலா காட்டுவோம். சோ... விசுவலுக்கு வாய்ப்புள்ள வரியாக எழுதிக் கொடுங்க.' என்று கேட்கிறார்கள். அதாவது உங்கள் வரி எப்படி இருக்கிறதோ அப்படி ஒரு ஷாட் எடுத்துக்கொள்வார்கள். படத்தில் அந்த வரி போகும்போது அந்தக் காட்சியை வைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, ‘மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை' என்று ஒரு வரி வருமானால் அதற்கு ஒரு மல்லிகைப்பூவை, பாடுகின்ற நாயகி நெருங்கிப் பார்ப்பதுபோல் ஒரு க்ளோசப் போட்டுவிடுவார்கள். மொழி என்பது காட்சி ரூப உருவகத்தை மீறிய அர்த்த வெளிக்குள் பிரவேசிக்கும்போதுதான் உன்னதமான கவிதை பிறக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இந்தத் தொந்தரவுகளால்தான் இன்றைய பாடல்கள் முடங்கியிருக்கின்றன. நான் தமிழ்த்திரையுலகின் எவ்வளவு பெரிய இயக்குநரையும் சவாலுக்கு அழைக்கிறேன். அன்றைக்கு இயன்றவரையில் பாத்திரங்களைப் பாடவிட்டு, பீம்சிங் இந்தப் பாடலை எடுத்து முடித்தது ஒருபக்கம் இருக்கட்டும். கண்ணதாசன் எழுதிய கீழ்க்காணும் பாடல் வரியின் பல்லவியை ‘விசுவலைஸ்' செய்து காட்டுங்கள், ஐயா ! உங்கள் டைரக்சன் திறமையை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் மொழியின் பெருவளத்திற்கு முன்னால் உங்கள் உபகரணமான கேமரா எவ்வளவு பற்றாக்குறையான ஒன்று என்பதைப் புரிந்துகொள்வீர்கள் !

இனி பாடலுக்குச் செல்வோம்...

மலர்ந்தும் மலராத
பாதி மலர்போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே !

நீ இன்னும் மலரவும் இல்லை. அதற்காக நீயொரு மலர் இல்லை என்பதற்கும் இல்லை. ஆகவே, நீ ஒரு பாதி மலர். அந்தப் பாதி மலர் எப்படி ஒவ்வொரு நொடியும் வளர்ந்து வளர்ந்து முழுமையடைகிறதோ அப்படி வளர்ந்துகொண்டிருக்கிற என் விழியின் வண்ணமாக விளங்குகின்ற கண்மணிப் பாவையே ! அந்த விழிப்பாவைக்கு எது பொருளூட்டும்படி இருக்கும் ? இருள்விலக்கி விடிந்து சுடர்கின்ற காலைப் பொழுதுதானே ! அப்படி எங்கள் உறவுக்குள் சூழந்த துயர இருளையும் இனி விலக்குவதற்காகத் தோன்றியிருக்கின்ற காலைப் பொழுதே ! அந்தப் பொழுதும் இன்னும் முழுதாக விடியவில்லையே. இன்னும் விடிந்தும் விடியாத மெல்லிருள் சூழ்ந்திருக்கிறதே. அந்த விளக்கமுடியாத இளங்காலையைப்போல் எங்கள் உறவுகளுக்குள் விளைந்த கலையே ! இனி வெண்மையான ஒளியின் உருவாகத் தோன்றவிருக்கின்ற அன்னப் பறவையே !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ்மன்றமே !

நதியில் மூழ்கிப் புரண்டெழுந்து குளுர்ச்சியைத் தனக்குள் வாங்கிக்கொண்டு நதி தீரத்து நன்னீர்க் கொடிகளில் உன் ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டு அழகாகச் சீவி அலங்கரித்து மெல்ல நடந்து வரும் இளந்தென்றலே ! வளர்ந்து நிற்கும் பொதிகை மலையில் தோன்றி புதுத் தென்றலாக நடந்து மாநகராகிய மதுரையைக் கண்டு அங்கே எம் தமிழ் மொழிப் பெருக்கின் இனிமையில் ஊறிப் பொலிவாக நிற்கும் மன்றமே !

யானைப் படைகொண்டு
சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணங்கொண்டு
இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா !

தங்கக் கடியாரம்
வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் !
பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே !

சிறகில் எனை மூடி
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா ?
கனவில் நினையாத
காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா ?

கண்ணின் மணிபோல
மணியின் இமைபோல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா !

Kannadasanசகோதரத்துவத்தின் சாஸ்வதத் தன்மையை அழகாகச் சொல்லி முடிகிறது பாடல். இங்கே ஈற்றடியை நோக்கவேண்டும். ‘மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா'. மண் கடல் வான் என்கிற வரிசைக்கிரமத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. மண் எவ்வாறு மறைய முடியும் ? கடல்பொங்கி மேவினால் மட்டுமே மண்மறையும். அப்பொழுது உலகமே வெறும் கடல்கோளமாகக் காட்சியளிக்கும். அந்தக் கடல் எவ்வாறு மறையும் ? ஒன்றுமேயில்லாத சூனியாமானால் மட்டுமே முடியும். ஒன்றுமே இல்லாத சூனியத்தில் வானவெளி மட்டுமே இருக்கும். அந்த சூனிய வெளியான வானம் எவ்வாறு மறையும் ? தெரியவில்லை. அந்த சூனியவெளியே இல்லாமல் மறைந்தாலும் எங்கள் உறவை மறக்க முடியாதே. பாடலுக்கு எவ்வளவு பகாசுர முற்றுப் புள்ளி !

பாடல் முழுக்க கண்ணதாசன் ஒரே சந்தத்தில் எழுதியிருக்கிறார். இது
கண்ணதாசன் எழுதியபிறகு இசையமைக்கப்பட்ட பாடலாக இருக்க வேண்டும். ஒரே சந்தத்தில் உள்ள வரிகளுக்கு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் நுணுக்கமான வர்ண மெட்டுகளை அமைத்திருக்கிறார்கள். டி. எம். சௌந்தரராஜனின் யவ்வனமான குரலை அனுபவிக்க வேண்டுமானால் இந்தப் பாடலைக் கேட்கவேண்டும். பி. சுசீலாவின் தேம்பலில் உள்ள பாவத்தை உயிருக்குள் பரவவிடவேண்டும். என் அனுமானத்தில் இப்பாடல் தமிழ்த்திரையின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று.

 

மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்

தமிழ்த் திரையுலகம் எத்தகைய படங்களைச் செய்து பெரும் செல்வம் ஈட்டியது என்று ஆய்வோமானால் நிச்சயமாக அது ரத்த உறவுகளுக்கிடையே நிகழும் பாசப் போராட்டங்களைச் சித்தரித்த படங்களால்தான். பிற்காலத்தில் ‘செண்டிமென்ட் படங்கள்' என்று அவற்றை எளிதாகத் தரம்பிரித்துப் வைத்தாலும் அவ்வகைமைப் படங்கள் அன்றின்று என்றில்லாமல் எல்லாக் காலத்திலும் வெளியானபடியே இருந்திருக்கின்றன.

எளிமையான மனித மனங்கள் அறிவைப் புறந்தள்ளி உணர்வின் வழியே உருகியோடிய தருணங்களை மிகச் சிறப்பாகவே எடுத்தாண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்து ஆட்டிப்படைத்தன அவை.

a poet s tribute late legend tms

இளமை முறுக்கத்திலுள்ள பார்வையாளனுக்கு காதல் கதைகளும் அடிதடி சாகசப் படங்களும் இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்குப் பாசப் பெருக்கில் பாத்திரங்கள் நிகழ்த்தும் உரையாடல்களும் நாத்தழுதழுப்பான சொல்லாடல்களும் புரியக்கூடிய அகவைப் பக்குவம் ஏற்பட்டிருப்பதில்லை. ஒரு செண்டிமெண்ட் காட்சி தோன்றினாலே இன்று பலர் ‘பொறா ஊளை' இடுகின்றனர்.

திரையரங்கப் பார்வையாளர்களாக அவ்வினத்தவர்களே எஞ்சியிருப்பதால், இனிமேலான காலங்களில் பாலூட்டி இனங்களுக்கே சிறப்பாய் உரிய பாச உணர்ச்சியைப் பேசுபொருளாகக் கொண்டு உள்ளத்தைப் பதைபதைக்க வைக்கும் உறவுகளின் கதைகளைக் கூறும் படங்கள் தோன்றக்கூடும் என்று எந்த உறுதியுமில்லை. அது வேறொரு வடிவமெடுத்து இன்று எல்லார் வீட்டுக் கூடங்களிலும் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களாகி இருக்கின்றது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாக்களைக் காண அரங்கை நாடி நிறைத்த கூட்டம் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆகியிருந்தது. பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக திருவிழாக்களுக்குச் சென்றார்கள். மாமன் மச்சான் சித்தி பெரியம்மா அத்தை வீடுகளுக்குச் சென்றார்கள். திரைப்படங்களுக்குச் சென்றார்கள். எல்லார் இதயங்களும் ஒன்றோடு ஒன்று உறவுக் கயிற்றால் இறுகப் பிணைந்திருந்தன. தாத்தா பாட்டி தொடங்கி பேரன் பேத்திகளாலாகிய ஒரு குடும்பத்தில் சாதாரணமாக பத்துப் பதினைந்து நபர்கள் கூடி வாழ்ந்தார்கள். எல்லாருக்கும் மூத்தோரின் சொல் கைவிளக்காக இருந்தது. உறவுகளுக்கிடையில் நிதமும் கண்ணீர் ததும்பவைக்கும் ஒரு சம்பவம், சகித்துக்கொள்ளவே முடியாத சின்னச் சின்ன சச்சரவுகள், செரிக்கமுடியாத பிரிவுகள், மீண்டும் அன்பால் நெருங்கிக் கட்டித் தழுவிக்கொள்ளுதல் என்று நெஞ்சங்களுக்கிடையில் தங்கச் சரிகையிடப்பட்ட உணர்விழைகள் ஊடிப் பின்னியிருந்தன.

இன்று ஒரு குடும்பம் என்பது மூவர் அல்லது நால்வரால் மட்டுமே ஆகிய இரத்த உறவுகளின் சிற்றலகாகக் குறுகிவிட்டது. தந்தைமை தாய்மை என்பதை வெறும் ஒற்றைப் பிள்ளைப் பேற்றோடு முடித்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. அதுவே வாழ்க்கையைக் கொஞ்சம் பிய்த்தல் பிடுங்கல் இல்லாமல் வாழ்வதற்கும் மற்றவர்களோடு போட்டி போட்டு ஓடுவதற்கும் ஏற்றது என்ற கருத்தால் ஒற்றைப் பிள்ளைக் குடும்பங்கள் பெருகிவிட்டன. இரண்டுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை.

மகாபாரதத்தில் ஒரு சொற்றொடர் வரும். ‘ஒற்றைப் பிள்ளை மட்டுமே பெற்றவன் பிள்ளைப்பேறற்ற மலடனுக்கு எவ்விதத்திலும் மேலானவனல்லன்' என்பதே அது. எந்நேரத்திலும் மக்களைத் தாக்கக்கூடிய அக்காலத்தைய பேரிடர்களான நோய், போர், பஞ்சம் போன்றவற்றால் அந்த ஒரே பிள்ளையையும் எளிதில் பறிகொடுத்துவிட நேரலாம் என்பதால் அத்தொடரில் உண்மை இல்லாமலில்லை. ஆனால், பெற்றோருக்கு ஒரே பிள்ளையாய்ப் போய்விட்ட ஒரு குழந்தை, தன் வாழ்வில் அண்ணன் அக்காள் தம்பி தங்கை ஆகிய எந்த உறவுகளையும் அனுபவிப்பதில்லை. தாய் தந்தையற்ற குழந்தை எப்படி அநாதையாகக் கருதத் தக்கதோ அதேபோல் சகோதர சகோதரியற்ற குழந்தையும் போதிய உறவுகளற்ற அநாதையே.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழந்தொடர்தான் எத்துணை பொருள் மிக்கது! குழவிப் பருவத்திற்குத் தாயும், வளரும் பருவத்திற்குத் தந்தையும் எப்படி முக்கியமோ - அதற்கு நிகராக மீதமுள்ள வாழ்க்கைப் பருவத்திற்கு உடன்பிறப்புகள் முக்கியம். ஆனால், இன்றைய பிள்ளை உடன் பிறப்புகளற்று வாழ்கிறது.

சகோதரமற்ற நிலை அத்தோடு முடிவதில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி, அதற்கொரு பிள்ளை பிறந்தால் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் என்னும் உறவுக்கண்ணிகளே முற்றாக அறுந்து இன்னும் அதிக உறவிழப்புக்கு ஆளாகிப் பேரநாதையாக அல்லவா நிற்கும் ! உறவுகள் விடுபட்டு விடுபட்டு உருவாகும் தலைமுறைகள் மேலும் மேலும் அதிகத் தனிமையடைந்து மானுட ஆதார உணர்ச்சிகளே அற்றுப் போய்விடாதா ? எவ்வுணர்ச்சிகளோடு அந்தத் தலைமுறை தம் உலகை எதிர்கொள்ளும் ? எண்ணிப் பார்க்கவே கூசுகிறதே! இக்கூறுகளைத்தாம் சமூக மானுடவியல் ஆய்வாளர்கள் இன்னும் அதிக அழுத்தத்தோடு கூறுகிறார்கள்.

உறவுகளின் பெருமைகளையும் அவற்றின் ஊடு சரடுகளையும் மிகச் சரியாக எடுத்தாண்டு பேசிய தமிழ்த் திரைப்படங்கள் பிற்காலத் தலைமுறைக்கு வரலாற்று அதிர்ச்சியாக மாறி நிற்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அறுபதுகளில் வெளியான கறுப்பு வெள்ளைப் படங்கள் அந்தத் தடத்தில் அருமையாக நடை பயின்றிருக்கின்றன. உறவுகளின் உணர்ச்சி நிழல்களையும் பேரலைகளையும் இறுகப் பற்றி இயல்பு பிறழாமல் கதை சொன்ன நல்ல இயக்குநர்கள் நம்மிடம் இருந்திருக்கிறார்கள். பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், துரை, சேரன், தங்கர் பச்சான் போன்றவர்கள் அத்தகைய படங்களை விசாலமான தளங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களில் பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் இயக்கிய படங்களுக்குத் தனித்த அடையாளங்கள் உண்டு. அவருடைய இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘ப'கர வரிசைப் படங்கள் இன்றும் ஈர்ப்புக் குறையாதவை.

உறவுகள் என்னும் பூமடல்களில் உறைந்திருக்கும் உணர்ச்சித் துளிகளைச் சேகரிக்கும் வேலைதான் கலைஞர்களின் விருப்பம். நாமெல்லாம் உணர்ந்த, ஆனால், நம்மெவரும் அதன் உட்கட்டமைப்புகளில் தெளிவடையாமல் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்தை அவர்கள் தம் கலை ஊடகத்தின் வாயிலாகக் கட்டி எழுப்பும்போது நம்மை அறியாமல் நாம் கண்ணீர் உகுக்கிறோம். நமக்கும் இது நேர்ந்தது என்று நம்மையறியாமல் நாம் உருகுகிறோம். அதன் முடிவில் நாம் அடையும் ‘அந்த ஏதோ ஒன்று' நிச்சயம் பகுத்தறிவுக்கு உட்பட்டது அன்று... அது கண்டவர்கள் மட்டுமே நன்றுணரும் ஒருவகை ஆன்மீகம்.

அண்ணன் தங்கைப் பாசத்திற்கு நிகராக இவ்வுலகில் இன்னொன்று இல்லை. அப்படி ஒன்று இருந்தால் அது அக்காள் தம்பிப் பாசமாகத்தான் இருக்கமுடியும். சகோதரத்துவத்தின் அத்தனை ஒளிக்கதிர்களும் ஒன்றாகத் திரண்டு ஜுவாலையாகி ஒளிர்கின்ற தனித்துவமான உறவுநிலை அது. ஒரு வயிற்றுப் பிறப்பில் உதித்த இருவேறு பால் உயிர்கள். இன்றும் கூட, தம் சகோதரிகள் ஐவருக்கும் திருமணம் செய்துவைத்தாக வேண்டிய யாகத்தில் தம் வாழ்வை ஒருகணமும் எண்ணிப் பாராது உழைத்துக்கொண்டிருக்கும் அண்ணன், தம்பிகள் ஆயிரம். தன் அண்ணன் குறைவில்லாமல் வாழட்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்தைத் தன் கணவனுக்கே தெரியாமல் கையெழுத்திட்டுவிட்டுச் செல்லும் தங்கைகள் ஆயிரம். தூத்துக்குடியில் முத்தெடுக்க மூழ்குபவர்கள் தம் இடுப்பில் கட்டியிருக்கும் கயிற்று நுனியைத் தம் மனைவியின் சகோதரனிடத்தில் மட்டுமே ஒப்படைத்து மூழ்குவார்களாம். தன் மனைவியின் சகோதரனாகிய அவன் மட்டுமே தன் சகோதரிக்காகத் தன்னை மேலிழுத்து மீட்பான் என்னும் ஆதி நம்பிக்கை அது. அந்த நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை. இனியும் பொய்க்காது.

ஓர் ஆடவனுக்கு உலகிலுள்ள மற்ற மங்கைகள் வாசமலராக இருக்கக் கூடும். சகோதரி மட்டுமே அவனுக்குப் பாசமலர். ‘நீ அக்கா தங்கச்சி கூடப் பொறக்கல ?' என்னும் வசை வாள் கூர்மையான வசை.

Pasamalarபீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ‘பாசமலர்' திரைப்படம் அண்ணன் தங்கை உறவுக்கு இலக்கணம் வகுத்து இயம்பிய படம். இத்திரைப்படத்தைக் கண்ணுற்றிராத சென்ற தலைமுறையினர் ஒருவரும் இலர். தமிழர் வாழ்வோடு பிணைந்து இன்றும் உரையாடிக்கொண்டிருக்கும் உணர்ச்சிப் படங்களுள் இத்திரைப்படத்திற்கு முதன்மையான இடம் உண்டு.

தன் தங்கையைப் பேணி வளர்த்து ஆளாக்கும் அண்ணன். தன் அண்ணனுக்காகப் பாச உருவாய் வாழும் தங்கை. இருவரும் கூடியுழைத்து வாழ்வில் உயர்கிறார்கள். தங்கை தன் அண்ணனுக்கு எதிரான வர்க்க சிந்தனையுள்ள ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அண்ணனுக்கும் ஒருத்தி மனையாட்டி ஆகிறாள். புதிய மண உறவுகளால் அண்ணன் தங்கைக்கிடையே பாசத்தை மீறிய முரண்பாடுகள் முளைக்கின்றன. அண்ணனும் தங்கையும் முறையே பிள்ளைப் பேறடைகிறார்கள். தத்தம் குழந்தைகளைத் தாலாட்டும் தொனியில் தம் சகோதர உறவின் அருமை பெருமையை, உறவில் திளைத்து மகிழ்ந்திருந்த பழைய காலத்தை, இனி இந்தக் குழந்தைகளால் தாம் ஒன்று சேர்வதற்கு மிஞ்சியிருக்கும் நம்பிக்கையை இருவரும் பாடுகிறார்கள். இதுதான் திரையில் பாடல் இடம்பெறும் சூழல்.

கண்ணதாசன் தம் காதல் பாடல்களுக்காகவும் தத்துவப் பாடல்களுக்காகவும் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார். அவருடைய தத்துவப் பாடல்களுக்காகவோ நல்ல காதலுணர்ச்சிப் பாடல்களுக்காகவோ நான் அவரைப் பெரிதும் வியக்கவில்லை. அவருடைய தனிச்சிறப்பு என்பது வெகு சிக்கலான அபூர்வமான கதைத் தருணத்தைத் தம் உயிர்ப்பான தமிழ் வரிகளால் எள்ளளவும் கட்டுக்குலையாத சொற்களைக் கோத்து ஒட்டுமொத்தத் திரைப்படத்தையே உயரத் தூக்கி நிறுத்தும் மேதைமைதான்.

TM Soundararajanஇன்றைக்குப் பாட்டு எழுதக் கேட்கும் இயக்குநர்கள் பாடலாசிரியர்களை ‘சார்... கொஞ்சம் விசுவலா எழுதிக் கொடுங்க. உங்கள் வரியை வெச்சுத்தான் நாங்க விசுவலா காட்டுவோம். சோ... விசுவலுக்கு வாய்ப்புள்ள வரியாக எழுதிக் கொடுங்க.' என்று கேட்கிறார்கள். அதாவது உங்கள் வரி எப்படி இருக்கிறதோ அப்படி ஒரு ஷாட் எடுத்துக்கொள்வார்கள். படத்தில் அந்த வரி போகும்போது அந்தக் காட்சியை வைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, ‘மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை' என்று ஒரு வரி வருமானால் அதற்கு ஒரு மல்லிகைப்பூவை, பாடுகின்ற நாயகி நெருங்கிப் பார்ப்பதுபோல் ஒரு க்ளோசப் போட்டுவிடுவார்கள். மொழி என்பது காட்சி ரூப உருவகத்தை மீறிய அர்த்த வெளிக்குள் பிரவேசிக்கும்போதுதான் உன்னதமான கவிதை பிறக்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இந்தத் தொந்தரவுகளால்தான் இன்றைய பாடல்கள் முடங்கியிருக்கின்றன. நான் தமிழ்த்திரையுலகின் எவ்வளவு பெரிய இயக்குநரையும் சவாலுக்கு அழைக்கிறேன். அன்றைக்கு இயன்றவரையில் பாத்திரங்களைப் பாடவிட்டு, பீம்சிங் இந்தப் பாடலை எடுத்து முடித்தது ஒருபக்கம் இருக்கட்டும். கண்ணதாசன் எழுதிய கீழ்க்காணும் பாடல் வரியின் பல்லவியை ‘விசுவலைஸ்' செய்து காட்டுங்கள், ஐயா ! உங்கள் டைரக்சன் திறமையை நான் ஒப்புக்கொள்கிறேன். உங்கள் மொழியின் பெருவளத்திற்கு முன்னால் உங்கள் உபகரணமான கேமரா எவ்வளவு பற்றாக்குறையான ஒன்று என்பதைப் புரிந்துகொள்வீர்கள் !

இனி பாடலுக்குச் செல்வோம்...

மலர்ந்தும் மலராத
பாதி மலர்போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே !

நீ இன்னும் மலரவும் இல்லை. அதற்காக நீயொரு மலர் இல்லை என்பதற்கும் இல்லை. ஆகவே, நீ ஒரு பாதி மலர். அந்தப் பாதி மலர் எப்படி ஒவ்வொரு நொடியும் வளர்ந்து வளர்ந்து முழுமையடைகிறதோ அப்படி வளர்ந்துகொண்டிருக்கிற என் விழியின் வண்ணமாக விளங்குகின்ற கண்மணிப் பாவையே ! அந்த விழிப்பாவைக்கு எது பொருளூட்டும்படி இருக்கும் ? இருள்விலக்கி விடிந்து சுடர்கின்ற காலைப் பொழுதுதானே ! அப்படி எங்கள் உறவுக்குள் சூழந்த துயர இருளையும் இனி விலக்குவதற்காகத் தோன்றியிருக்கின்ற காலைப் பொழுதே ! அந்தப் பொழுதும் இன்னும் முழுதாக விடியவில்லையே. இன்னும் விடிந்தும் விடியாத மெல்லிருள் சூழ்ந்திருக்கிறதே. அந்த விளக்கமுடியாத இளங்காலையைப்போல் எங்கள் உறவுகளுக்குள் விளைந்த கலையே ! இனி வெண்மையான ஒளியின் உருவாகத் தோன்றவிருக்கின்ற அன்னப் பறவையே !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ்மன்றமே !

நதியில் மூழ்கிப் புரண்டெழுந்து குளுர்ச்சியைத் தனக்குள் வாங்கிக்கொண்டு நதி தீரத்து நன்னீர்க் கொடிகளில் உன் ஈரத்தலையைத் துவட்டிக்கொண்டு அழகாகச் சீவி அலங்கரித்து மெல்ல நடந்து வரும் இளந்தென்றலே ! வளர்ந்து நிற்கும் பொதிகை மலையில் தோன்றி புதுத் தென்றலாக நடந்து மாநகராகிய மதுரையைக் கண்டு அங்கே எம் தமிழ் மொழிப் பெருக்கின் இனிமையில் ஊறிப் பொலிவாக நிற்கும் மன்றமே !

யானைப் படைகொண்டு
சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணங்கொண்டு
இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா !

தங்கக் கடியாரம்
வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் !
பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான
மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் !

நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே !

சிறகில் எனை மூடி
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா ?
கனவில் நினையாத
காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா ?

கண்ணின் மணிபோல
மணியின் இமைபோல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா !

Kannadasanசகோதரத்துவத்தின் சாஸ்வதத் தன்மையை அழகாகச் சொல்லி முடிகிறது பாடல். இங்கே ஈற்றடியை நோக்கவேண்டும். ‘மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா'. மண் கடல் வான் என்கிற வரிசைக்கிரமத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. மண் எவ்வாறு மறைய முடியும் ? கடல்பொங்கி மேவினால் மட்டுமே மண்மறையும். அப்பொழுது உலகமே வெறும் கடல்கோளமாகக் காட்சியளிக்கும். அந்தக் கடல் எவ்வாறு மறையும் ? ஒன்றுமேயில்லாத சூனியாமானால் மட்டுமே முடியும். ஒன்றுமே இல்லாத சூனியத்தில் வானவெளி மட்டுமே இருக்கும். அந்த சூனிய வெளியான வானம் எவ்வாறு மறையும் ? தெரியவில்லை. அந்த சூனியவெளியே இல்லாமல் மறைந்தாலும் எங்கள் உறவை மறக்க முடியாதே. பாடலுக்கு எவ்வளவு பகாசுர முற்றுப் புள்ளி !

பாடல் முழுக்க கண்ணதாசன் ஒரே சந்தத்தில் எழுதியிருக்கிறார். இது
கண்ணதாசன் எழுதியபிறகு இசையமைக்கப்பட்ட பாடலாக இருக்க வேண்டும். ஒரே சந்தத்தில் உள்ள வரிகளுக்கு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் நுணுக்கமான வர்ண மெட்டுகளை அமைத்திருக்கிறார்கள். டி. எம். சௌந்தரராஜனின் யவ்வனமான குரலை அனுபவிக்க வேண்டுமானால் இந்தப் பாடலைக் கேட்கவேண்டும். பி. சுசீலாவின் தேம்பலில் உள்ள பாவத்தை உயிருக்குள் பரவவிடவேண்டும். என் அனுமானத்தில் இப்பாடல் தமிழ்த்திரையின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று.

 

காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து

Leaders Condole Death Tm Soundararajan

சென்னை: ‘தமிழைத் தமிழாக உச்சரித்த குரல், காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் ' என நேற்று உடல் நலக்குறைவினால் மறைந்த பிரபல பிண்ணனிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்...

நாட்டையே ஆண்ட சிம்மக்குரல்...

50 ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டை ஆண்ட குரல் அடங்கிவிட்டது. காற்றில் ஒரு வெற்றிடம் விழுந்து விட்டது. மறக்க முடியுமா அந்த மணிக்குரலை?. பிஞ்சு வயது முதல் எங்கள் வாழ்வின் தாழ்வாரங்களில் தவழ்ந்த குரல் டி.எம்.எஸ். குரல்.

காதலும், கண்ணீரும்...

எங்கள் பால்ய வயதை நுரைக்க நுரைக்க நிறைத்த குரல். எங்கள் காதலோடும் கண்ணீரோடும் கலந்த குரல். இலக்கியங்களைப் பாடிக் காட்டியக் குரல்; தமிழைத் தமிழாக உச்சரித்த குரல். இப்படிப்பாட இன்னொருவர் பிறக்க முடியுமா என்று ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் ஆச்சரியத்தை அள்ளி வீசும் குரல் அவர் குரல். கருவறை தொடங்கிக் கல்லறை வரையில் வாழ்வின் சம்பவங்களோடு கூடவே வரும் குரல். அவருக்கிணையான குரல் அவருக்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை.

நான் கேட்ட முதல் பாடல்...

நாடோடி மன்னனில் அவர் பாடிய தூங்காதே தம்பி தூங்காதே பாடல் தான் 6 வயதில் நான் கேட்ட முதல் பாடல். என் வாலிபத்தோடு அவர் குரல் வலம் வந்து கொண்டே இருந்தது. எரிமலை எப்படிப் பொறுக்கும் என்று அவருக்கு நான் பாடல் எழுதுவேன் என்றோ அவரோடு சென்று பத்மஸ்ரீ பட்டம் பெறுவேன் என்றோ நினைத்தே பார்த்ததில்லை.

மயக்கும் குரலோன்...

சோர்ந்து கிடக்கும் மனசுக்குச் சுளுக்கெடுக்கும் குரல் டி.எம்.எஸ்.சின் குரல். ‘அச்சமென்பது மடமையடா‘ பாடலை கேட்கும்போது நரம்புகள் தெரிக்கும். ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?‘ கேட்கும்போது காதல் ரசம் கசியும். ‘நான் ஆணையிட்டால்‘ கேட்கும்போது சோர்ந்து கிடக்கும் மனம் துள்ளி எழும். ‘எண்ணிரண்டு பதினாறு வயது‘ கேட்கும் போது மனம் 16 வயதுக்குப் பயணப்படும்.

குரலில் ரசவாதம்...

எந்த நடிகருக்குப் பாடினாலும் அதை உள்வாங்கித் தனமயப்படுத்திக்கொண்டு தன் பாடலாகவே மாற்றிக்கொள்ளும் ரசவாதம் தெரிவித்தவர். திராவிட இயக்க அரசியலை வளர்த்ததில் அவர் குரலுக்குப் பெரும் பங்குண்டு. அவர் மரணத்திற்கு முதல் நாள் முன்னிரவு 7.30 மணிக்கு அவரைச் சென்று பார்த்தேன். காற்றையே கட்டி ஆண்ட அந்த மகா கலைஞன் சுவாசிக்கத் துன்பப் பட்ட காட்சி கண்டு கண்கலங்கி நின்றேன்.

இரங்கள்...

அவர் உடல் மறைந்தாலும் குரல் மறைவதில்லை. இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டி தமிழ் சொல்லிக் கொடுக்கும் சங்கீதக் குரலாக டி.எம்.எஸ்.சின் குரல் நெடுங்காலம் நிலைத்திருக்கும். வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை டி.எம்.எஸ். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அவரது உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.