சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் - சம்பளம் ரூ 7 கோடி!

|

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் - சம்பளம் ரூ 7 கோடி!

ஹைதராபாத்: புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ‘சாய்பாபா' என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் முறையில் உருவாகும் இப்படத்தில் சாய்பாபா வேடத்தில் நடிக்க ஏராளமான தென்னிந்திய நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, கடைசியில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார். அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரது சம்பளம் ரூ 7 கோடி என தெரிய வந்துள்ளது. மம்முட்டி, மோகன்லால் கூட இவ்வளவு சம்பளம் பெற்றதில்லை.

தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடும் திட்டமுள்ளதாம். இந்த படத்தில் கோடி ராமகிருஷ்ணாவுடன் திரையுலகின் பல ஜாம்பவான்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இசைக்கு இசைஞானி இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சாய் பாபாவின் 20 வயது முதல் அவர் சமாதி அடையும் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புட்டபர்த்தி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

 

Post a Comment