உ படத்துக்கு யு சான்று கொடுத்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!

|

அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து இயக்கியுள்ள உ படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தப் படத்தை தணிக்கை அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டினர்.

படத்தைப் பார்த்து விட்டு, சிறந்த நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டுள்ள நல்ல பொழுதுபோக்குப் படமாக உ இருக்கிறது..." என்கிற பாராட்டுதலுடன் படத்திற்கு யு சான்றிதழும் கொடுத்திருக்கின்றனர்.

படம் பார்த்து முடிந்த கையோடு இயக்குனரைத் தேடிய அதிகாரிகள் முன்பு ஆஷிக் போய் நின்றதும், இவ்வளவு சின்ன வயது இயக்குனரா? என்று ஆச்சர்யப்பட்டார்களாம்.

உ படத்துக்கு யு சான்று கொடுத்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!  

அடுத்து தயாரிப்பாளர் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் நான்தான் என ஆஷிக் சொன்னதும் அவர்களின் ஆச்சர்யம் அதிகமானதாம்.

''சொந்தக் காசுல, நல்லபடம் எடுத்துருக்கீங்க... நல்ல பெரிய இயக்குனரா வாங்க'' என வாழ்த்தி அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.

படம் திரையைத் தொடும் தேதியை விரைவில் அறிவிப்பேன் என ஆஷிக் தெரிவித்தார். இந்தப் படத்தின் ஹீரோ தம்பி ராமையா என்பது நினைவிருக்கலாம்!

 

Post a Comment