ஏதோ ஒரு காலத்தில் சுமாரான சில படங்களில் ஹீரோவாக நடித்த பெருமையிலிருந்தே இன்னமும் வெளியில் வரமுடியாமல் இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாகிறார்.
படத்தின் பெயர் ஜிகிர்தண்டா. பீட்சா படத்தை உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் இது.
இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
‘பீட்சா' படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தாலும், இமேஜ் முக்கியமல்ல, கேரக்டர்தான் முக்கியம் என்பதை உணர்த்த இந்த வில்லன் அவதாரம் எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி.
Post a Comment