பாண்டிராஜ் படத்தில் சிம்பு.. இசையமைக்கிறார் குறளரசன்!

|

பாண்டிராஜ் படத்தில் சிம்பு.. இசையமைக்கிறார் குறளரசன்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி, அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தனுஷ் நடிக்கவில்லை.

காதலும் நகைச்சுவையும் கொண்ட இந்தக் கதையை்க கேட்ட சிம்பு, தானே அதில் நாயகனாக நடிக்க முன்வந்தார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக குறளரசன் அறிமுகமாகிறார். குறளரசன் டியூன்கள் பிடித்துப் போய் இப்படத்துக்கு இசையமைக்க வைத்தாராம் பாண்டிராஜ்.

அடுத்த வாரம் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர்.

 

Post a Comment