கோலிவுட்டின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது போர்பிரேம்ஸ் (4 frames).
வெளிப்பார்வைக்கு இது ஒரு பிரிவியூ தியேட்டர் மட்டும்தான். ஆனால் ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை வழங்கும் ஒன் ஸ்டாப் ஷாப் இந்த போர்பிரேம்ஸ்.
கலைஞர், ரஜினி என விவிஐபிக்கள் விருப்பத்துடன் படம் பார்க்க வரும் தியேட்டர் இது.
கடந்த சில வாரங்களாக இந்தத் திரையரங்கில் எந்தப் படமும் போடாமல் இருந்தார்கள். திடீரென ஒரு நாள் தனுஷ் நடித்த அம்பிகாபதி படத்தைப் பார்க்க போர்பிரேம்ஸுக்கு அழைத்திருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, இந்தத் தியேட்டர் புதுப்பிப்பதற்காக லீவு விட்டிருந்த விஷயம்.
சும்மா சொல்லக் கூடாது... சுமாரான அந்தப் படத்தைக் கூட சுகமாக பார்க்க வைத்துவிட்டார் கல்யாணம். அருமையான இருக்கைகள், இதமான குளிர், ரம்யமான சூழல், துல்லியமான ஒலி என போர்பிரேம்ஸில் படம் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவம் எனும் அளவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
அந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு தியேட்டர்களையும் புதுப்பிக்க மூன்று வார காலம் ஆனதாம். வெளிநாட்டிலிருந்து இருக்கைகளைத் தருவித்திருக்கிறார்கள். அதேபோல, நெருக்கியடித்துக் கொண்டு இல்லாமல், தாராளமாக இருக்கும்படி இருக்கைகளை அமைத்துள்ளனர்.
இத்தனைக்கும் முக்கிய காரணம் அதன் நிர்வாகி கல்யாணம். கேட்டால், "நம்ம கைல என்னங்க இருக்கு... சார் (உரிமையாளர் இயக்குநர் பிரியதர்ஷன்) இப்படியெல்லாம் செய்யணும்னு ஆசைப்பட்டார். அதைச் செய்யறதுக்குதானே நாம இருக்கோம்," என்றார் தனது வெண்கலக் குரலில்!
Post a Comment