சினிமாவில் இருந்தாலும் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்தவர் அந்த தந்தை நடிகர். அவர்களின் புதல்வர்கள் சிங்கமாகவும், சிறுத்தையாகவும் நடித்து அவரது பெருமையை காப்பாற்றி வருகின்றனர்.
இருவருமே இரட்டை குழல் துப்பாக்கியாக சினிமாத்துறையில் வலம் வருகின்றனர். இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்லை. இப்போது யார் கண் பட்டதோ சிங்கமும், சிறுத்தையும் முட்டிக்கொண்டு நிற்கின்றனராம்.
கோடம்பாக்கம் பக்கம் விசாரித்த போது நம் காதில் விழுந்தது இதுதான்.
பச்சை சினிமா நிறுவனம் நடத்தி வரும் சிங்கம், சிறுத்தையின் உறவுக்காரர், சிங்கத்திற்கு வரும் வாய்ப்பை எல்லாம் சிறுத்தையின் பக்கம் திருப்பிவிடுகிறாராம். தவிர சிறுத்தை நடிக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கிறார் பச்சை சினிமா நிறுவனர். மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வெளியிடுகிறார்.
கமகம படத்திற்கு முதலில் தேடியது சிங்கத்தைதான். ஆனால் சிக்கியதோ சிறுத்தை. அதேபோல பியூட்டி ராஜா படமும் இப்படித்தான் சிறுத்தை வசம் கைமாறியதாம். இப்போது சிங்கத்தை இயக்கியவரும் சிறுத்தையை இயக்க இருக்கிறார்.
இதனால் மனைவியிடம் புலம்பிய சிங்கம் தனியாக களமிறங்க முடிவெடுத்து தனியாக படத்தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டாராம். அதோடு சிங்கத்திற்கு கொடுத்த பப்ளிசிட்டி நகரத்தையே கலக்கியது. இதனால் சிறுத்தையும் தன்னுடைய கமகம படத்திற்கு இதேபோல பப்ளிசிட்டி பண்ணவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்
பங்காளிச் சண்டை பாசத்தை கலைத்துவிடுமே என்று கவலைப்படுகிறாராம் தந்தை நடிகர்.
Post a Comment