மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்!

|

சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார்.

அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர்.

மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்!

இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார்.

இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற இந்தி வில்லன் நடிகர் தமிழில் அறிமுகமாகிறார். நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சுரேந்திரன் இயக்குகிறார்.

 

Post a Comment