த்ரிஷாவுக்கும், வருணுக்கும் மார்ச் மாதம் திருமணமாமே?

|

சென்னை: த்ரிஷா தனக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என்கிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காதல் வாழ்க்கை கசந்து போன த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. அப்படியா, த்ரிஷா சொல்லவே இல்லையே என்று அவரது தாயை தொடர்பு கொண்டு கேட்டால் அவரோ என் மகளுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்.

த்ரிஷாவுக்கும், வருணுக்கும் மார்ச் மாதம் திருமணமாமே?

த்ரிஷாவோ தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படி நடந்தால் அதை நான் தான் முதல் ஆளாக உங்களிடம் தெரிவிப்பேன் என்றும் ட்விட்டரில் தெரிவித்தார். த்ரிஷாவும் சரி, அவரது அம்மா உமாவும் சரி நிச்சயம் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் நாம் அடுத்த வேலையை பார்ப்போம் என்று இருக்கையில் தான் இந்த புதிய விஷயம் தெரிய வந்தது.

த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. த்ரிஷாவுக்கு திருமணமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே நெருப்பில்லாமல் புகையாது பாஸ் என்று சிலர் பிட்டை போடுகிறார்கள்.

 

Post a Comment