லிங்கா கதையைத் திருடிட்டேனா.. தனக்குத் தானே பப்ளிசிட்டி தேடிய போர்வெல் டைரக்டர்!

|

ரஜினியின் லிங்கா படத்தின் கதையை திருடி வேல்முருகன் போர்வெல் படத்தை எடுக்கவில்லை என்று அதன் இயக்குநர் கோபி ஒரு திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கம்பம், தேனி, போடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்பொழுது மக்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுவார்கள். வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

லிங்கா கதையைத் திருடிட்டேனா.. தனக்குத் தானே பப்ளிசிட்டி தேடிய போர்வெல் டைரக்டர்!

நான் எனது வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் முழுக்க முழுக்க போர் லாரியை பயன்படுத்தி ஏழை விவசாயிகளின் தண்ணீர் பஞ்சம் போக வைத்து விவசாயத்தையும், விவசாயியின் வாழ்க்கையையும் உயர்த்த போர் வண்டி எவ்வாறு பயன்படுகிறது என்பதை படத்தில் கூறி உள்ளேன்.

அதேபோல டேம் ஒன்று உடையும் தருவாயில் உள்ளதைப் பார்த்து ஊரையும், ஊர் மக்களையும் காக்க வேல்முருகன் போர் லாரி குழுவினர்கள் எப்படி பாடுபட்டு அந்த டேமை அடைக்கிறார்கள் என்பதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

வேல்முருகன் போர்வெல்ஸ் படம் லிங்கா படத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறுவது தவறான செய்தி. இதை நம்பி ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் வேல்முருகன் போர்வெல்சை பார்க்க சென்றதாக வாய்வழி செய்தி பரவியுள்ளது. தயவுசெய்து தவறான தகவல்களை பரப்பி என்னையும், என் படக் குழுவினரையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இப்படி ஒரு குற்றச்சாட்டே எழாத நிலையில், இந்த இயக்குநரே முன்வந்து அறிக்கை விட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் கோடம்பாக்க பப்ளிசிட்டி ஸ்டன்ட் புரிந்தவர்கள்.

 

Post a Comment