காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

|

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

படம் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அல்லது முந்தைய நாள் நள்ளிரவு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி போடும் வழக்கம் ரஜினியின் படங்களிலிருந்துதான் ஆரம்பமானது. குறிப்பாக ஆல்பட் திரையரங்கில் இத்தகைய காட்சிகள் ரொம்பவே பிரபலம்.

காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

இப்போது இந்த மாதிரி முதல் நாள் முதல் காட்சிகள் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் நடத்தப்படுகின்றன.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இந்த காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இந்தக் காட்சியை மேள தாளம் முழங்க, ஏக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

ரசிகர் மன்றங்களை முற்றாக அஜீத் கலைத்த பிறகும், அவரது ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் அவர் படங்களை வரவேற்று கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment