சென்னை: தொப்பி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மனதினைக் கவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளார் தெரிவித்துள்ளார்.
"மதுரை சம்பவம்", வெளிவர இருக்கும் "சிவப்பு எனக்கு பிடிக்கும்" ஆகிய படங்களை இயக்கிய யுரேகாதான் இந்தத் தொப்பி படத்தையும் இயக்கியுள்ளார்.
குரங்கணி காட்டின் பசுமையான பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள தொப்பி காவலனாக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள ஒரு இளைஞனை பற்றிய கதை.
குற்றப் பின்னணியை களமாகவும், கலாச்சாரமாகவும் கொண்ட அந்த இளைஞனுக்கு அவனது லட்சியக் கனவை அடைய அதே குற்றப் பின்னணி தடையாக இருக்கிறது என்பதுதான் தொப்பியின் மூலக் கதைக் கரு.
வைரமுத்துவின் பாடல்கள், மற்றும் மைனா புகழ் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறதாம். ராயல் ஸ்கிரீன்ஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ். பரமராஜ் தயாரித்துள்ளார் இப்படத்தினை.
தொப்பி திரைப்படத்தின் மூலமாக மலையாள கரையின் புது வரவாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் புதுமுக கதாநாயகி ரக்ஷா ராஜ்.
இயக்குநர் யுரேகாவின் இயக்கத்தில் ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் "தொப்பி". இத்திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்ஷா ராஜ் பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், மற்றும் பல நடன கலைகளில் சிறுவயதில் இருந்தே பயிற்சி பெற்றவர்.
தொப்பி படத்தின் கதாநாயகனாக தொகுப்பாளரான முரளி ராம் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் பவர் ஸ்டார் தன்னுடைய சர்ச்சை பேச்சால் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment