சகாப்தம் ட்ரைலர் பாத்தீங்களா... தேறுவாரா கேப்டன் மகன்?

|

விஜய காந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏக அமர்க்களமாக, தமிழ் சினிமாவின் பெரும்பாலான நட்சத்திரங்கள் முன்னிலையில் வெளியாகிவிட்டன.

விழாவுக்கு வந்து வாழ்த்திய அனைவருமே விஜயகாந்தைப் போல சண்முகப் பாண்டியனும் சாதனை படைக்க வேண்டும் என்றார்கள்.

சிலர் விஜயகாந்தை பின்பற்றாமல் தனக்கென தனி பாணியில் சண்முகப் பாண்டியன் நடிக்க வேண்டும் என்றார்கள்.

படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறார் சண்முகப்பாண்டியன். குத்தாட்டம், டூயட், அதிரடி ஆக்ஷன், கார் சேஸிங், ஐ பட பாணியில் மொட்டை மாடிகளில் சைக்கிள் சண்டை, பவர் ஸ்டாருடன் இணைந்து காமெடி என ஆல்ரவுண்டர் வேலை பார்த்திருக்கிறார்.

விஜயகாந்த் மாதிரி வருவாரா சண்முகப் பாண்டியன்? ட்ரைலரைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது..? பார்த்துட்டு சொல்லுங்களேன்!

சகாப்தம் ட்ரைலர்

 

Post a Comment