ஏபிசிடி 2 படத்திற்கு வரவேற்பு எப்படி?

|

மும்பை: இந்தியில் இன்று வெளியாகிய ஏபிசிடி 2 படம் நன்றாக இருப்பதாக படத்தைப் பார்த்த மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். 3D யில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, வருண் தவான் இவர்களுடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார்.

படத்தின் கதை இதுதான் மிகப்பெரிய டான்சராக வரவேண்டும் என விரும்புகிறார் வருண் தவான், அதே போன்று ஸ்ரத்தா கபூரும் மிகப் பெரிய ஹிப்ஹாப் டான்சராக வேண்டும் என்று விரும்புகிறார்.

ABCD 2 Movie: House Full Shows In Theatres

இருவருக்கும் தங்கள் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் நடைபெறும் ஹிப் ஹாப் டான்ஸ் போட்டி ஒன்று நடைபெறுகிறது. எப்படியாவது அந்தப் பட்டதைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருவரும் சென்று மிகப்பெரிய டான்சரான பிரபுதேவாவை சந்திக்கின்றனர்.

டான்ஸ் போட்டியின் முதல் சுற்றில் இருவருமே வெளியே வந்து விட, அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை காதல், காமெடி, நடனம் இவற்றுடன் நேர்மையையும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் ரேமோ டி சௌசா.

படத்தில் கதை என்று பெரிதாக இல்லை ஆனால் வருண், பிரபுதேவா மற்றும் ஸ்ரத்தா இம்மூவரும் நடனம், காதல் மற்றும் நடிப்பு என படம் முழுக்க ரகளை செய்துள்ளனர். இவர்களின் நடனத்திற்காகவே ஒரு முறை படத்தைப் பார்க்கலாம் என்று சமூக வலைதளங்களில் குவிகின்றன இளசுகளின் கமெண்டுகள்.

இந்தப் படத்தில் வரும் சன் சாகித்யா பாடலை மட்டும் இதுவரை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

13 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்று 2000 திரை அரங்குகளில் இந்தியா முழுவதும் வெளியாகி 90 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

மும்பை முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த போதிலும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment