மும்பை மழையால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்

|

மும்பை: மும்பையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புறநகர் ரயில் சேவையும் மும்பையில் நிறுத்தப் பட்டுள்ளது.

வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகள் போன்றவை முழுவதும் நீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. பருவமழையின் இந்த அதிரடியால் சாதாரண மக்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மழையின் காரணமாக வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் மழையைத் திட்டியும், மறைமுகமாகப் பாராட்டியும் டிவிட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா " அதிகாலையில் நான் பார்க்கும் காட்சி இதுவல்ல, நிச்சயம் இன்று மும்பையில் கார் ஓட்டுவது கடினமான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகருமான சஜித் கான் " இன்று எனது கார் டிரைவரை வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறினேன், அதற்கு அவர் வீடு முழுவதும் மழை நீரால் நிறைந்து விட்டது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ராணா டகுபதி " 25 நிமிடங்களில் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டேன், எந்தவித போக்குவரத்து இடைஞ்சலும் இல்லாமல் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகள் தெளிவாக இருந்தன என்று கூறியுள்ளார்.

இதே போன்று மேலும் பல பாலிவுட் பிரபலங்களும் ஸ்டேட்டஸ் தட்டி மழையையும் டிவிட்டரில் ட்ரெண்ட் டாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment