சென்னை: எந்திரன் 2 படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஞ்சித் படத்தில் ரஜினி நடித்து முடித்தவுடன் எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் துவங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
எந்திரன் 2 படத்தை மிகப்பெரிய அளவில் எடுக்க இருப்பதால் நாயகியும் இந்திய அளவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு முகமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய ஷங்கர், அதற்காக பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பை சந்தித்துப் பேசினார்.
ஆனால் காத்ரீனா ஷங்கருக்கு உடனடியாக எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று கூறினார்கள், தற்போது எந்திரன் 2 படத்தில் காத்ரீனாவுடன் இணைந்து தீபிகா படுகோனேவும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எந்திரன் 2 வில் வில்லனாக நடிக்கும் விக்ரமிற்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஷங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனினும் இந்தத் தகவல் உண்மையாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ரஜினியின் கோச்சடையான் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த காத்ரீனா கைப் சில காரணங்களால் அதைத் தவற விட்டார்.
காத்ரீனாவிற்குப் பதில் தீபிகா படுகோனே நாயகியாக கோச்சடையானில் நடித்திருந்தார், தற்போது மீண்டும் ரஜினி படவாய்ப்பு இருவர் வீட்டுக் கதவையும் தட்டி இருக்கின்றது. ஷங்கர் படவாய்ப்பை யார் ஏற்கப் போகிறார்கள் யார் மறுக்கப் போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.
Post a Comment