பாகுபலி படத்துக்கும், அஜீத்துக்கும் என்ன சம்பந்தம்?

|

சென்னை: பாகுபலி படத்திற்கும் நடிகர் அஜீத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்று, சமீப காலமாக ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. நீங்க நெனைக்கிற மாதிரி பிரச்சினையெல்லாம் ஒண்ணும் கிடையாது.

அப்புறம் என்னன்னு கேட்கிறீங்களா மேல படிங்க, பாகுபலி படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்து படத்தை தாங்கிப் பிடித்த அனுஷ்கா, தமன்னா மற்றும் ராணா மூன்று பெரும் அஜீத்தின் படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடித்துள்ளனர்.

Baahubali Vs Ajith Movies

2013ம் ஆண்டு அஜீத் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆரம்பம், இந்தப் படத்தில் அஜீத்தின் நண்பனாக பிளாஷ்பேக் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார் ராணா.

2014 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிபெற்ற படம் வீரம், இந்தப் படத்தில் அஜீத்தின் காதலியாக நடித்து இருந்தார் தமன்னா. தமிழில் கிட்டத்தட்ட மார்க்கெட் சுத்தமாக இழந்திருந்த தமன்னாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்த படம் இது.

இந்த வருடம் (2015) பிப்ரவரியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்னை அறிந்தால். தமிழ் மட்டும் அல்லாது ஆந்திர பூமியிலும் நல்ல வசூலைப் பெற்ற இந்தப் படத்தில் 2 நாயகியரில் ஒருவராக அஜீத்துடன் இணைந்து நடித்து இருந்தார் அனுஷ்கா.

பாகுபலி படத்தில் நடித்த 3 பெரிய நட்சத்திரங்களும் அஜீத்துடன் இணைந்து நடித்ததைக் கூறி, சமூக வலைதளங்களில் அதிகமாக இந்தப் போஸ்ட்டை ஷேர் செய்து வருகின்றனர் அஜீத்தின் ரசிகர்கள்.

நீங்கல்லாம் நல்லா வரணும்...வருவீங்க...

 

Post a Comment