பாகுபலி படத்தையும் விட்டு வைக்காத சிம்பு ரசிகர்கள்

|

சென்னை: இதெல்லாம் பெருமையா கடமை என்று சந்தானம் ஒரு படத்தில் சொல்வது போல, சிம்பு ரசிகர்களின் செயல் அமைந்துள்ளது. வாலு படம் தொடர்ந்து வெளியாக முடியாமல் பல்வேறு காரணங்களால் தடைபட்டு உள்ளது.

இந்த நேரத்தில் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு, பிரர்த்தனையில் குதித்தனர். ஆனால் அவர்களின் ஆறுதல் எல்லை மீறிப் போனதில் அடுத்த கட்டமாக பாகுபலி படத்தையும் கையில் எடுத்துள்ளனர்.

பாகுபலி படத்தில் எடுத்தவுடன் ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவருவார். எதிரிகளிடம் இருந்து அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டி அருவியைக் கடந்து செல்லும் போது, ரம்யா கிருஷ்ணன் தண்ணீருக்குள் மூழ்கிவிடுவார்.

ரம்யா கிருஷ்ணனின் ஒரு கை மட்டும் வெளியில் நீண்டு அந்தக் குழந்தையை பத்திரமாகத் தாங்கி இருக்கும், கடைசியில் மலைவாழ் மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவர்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்தக் காட்சியை இயக்குநர் ராஜமௌலி எடுத்திருந்தார். ஆனால் சிம்புவின் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை அப்படியே மாற்றி வாலு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட சிம்புவை அந்தக் குழந்தை போன்றும், ரசிகர்களை ரம்யா கிருஷ்ணனாகவும் மாற்றி வெளியிட்டுள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான நபர்களால் ஷேர் செய்யப்படும் ஒன்றாக இந்தப் போஸ்ட் மாறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

சொல்றதுக்கு எதுவும் இல்லை....

 

Post a Comment