கடந்த இரு தினங்களாக ஒரு பரபர கிசுகிசு.. அது வேகமாக வளர்ந்து வரும் பாபி சிம்ஹா - சக நடிகை ரேஷ்மி காதல் பற்றியது.
ஆனால் அந்த கிசுகிசுவை தோன்றிய வேகத்திலேயே அர்த்தமில்லாததாக்கிவிட்டார் பாபி.
‘ஜிகர்தண்டா' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து, இப்போது உறுமீன், பாம்புச் சட்டை படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பாபி சி்ம்ஹா. உறுமீன் படத்தில் நாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பில் பாபிசிம்ஹாவுக்கும் ரேஷ்மி மேனனுக்கும் காதல் மலர்ந்ததாக சிலர் டமாரமடித்தார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வேறு செய்திகள் பரவின.
இதுகுறித்து பாபிசிம்ஹாவிடம் கேட்டபோது அவர் மறுத்தார்.
"எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ரேஷ்மி மேனன் எனது சக நடிகை. நட்பாக இருக்கிறார். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. ரேஷ்மியை திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை," என்றார் பாபி சிம்ஹா.
Post a Comment