சென்னை: தமிழ் காமெடி நடிகர்களில் நம்பர் ஒன்னாக விளங்குகிறார் பரோட்டா சூரி, வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான சூரி இன்று எட்ட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார்.
வடிவேலு மற்றும் சந்தானம் போன்றவர்கள் கதாநாயகனாக மாற, சூரியின் காட்டில் தற்போது அடைமழை தான், இரவுபகலாக 24மணி நேரமும் நடித்தால் கூட பல படங்களுக்கு கால்ஷீட் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிஸியாக இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சமீபத்தில் புலி படத்தில் சூரியை நடிக்கக் கூப்பிட்ட போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் அதில் நடிக்கவில்லை சூரி, ஆனால் புதுமுக இயக்குநர் ஒருவருக்கு கால்ஷீட்டை வாரி வழங்கி இருக்கிறார்.
நடிகர் நரேனை வைத்து கத்துக்குட்டி என்ற காமெடிப் படத்தை இயக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் சரவணன், இதற்காக சூரியிடம் கால்ஷீட் கேட்டபோது சுளையாக ஒரு மாதத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம்.
மொத்தம் 32 நாட்கள் இந்தப் படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியிருக்கும் சூரி, டப்பிங் பேசுவதற்கு தனியாக தேதிகளை அளிக்கவும் தயாராக இருக்கிறார்.
சூரியின் இந்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது, சூரியிடம் இதற்கான காரணம் கேட்டபோது சின்னபடம் பெரிய படம் என்ற பாகுபாடு எதுவும் நான் பார்ப்பதில்லை கதைதான் முக்கியம். எனக்கு கதை பிடித்திருந்தால் உடனடியாக தேதிகளை வழங்கி விடுவேன், நான் இந்தப் படத்திற்காக இவ்வளவு நாட்களை ஒதுக்கியது ஏன் என்று படம் வந்த பிறகு உங்களுக்கும் தெரியவரும்.
இதுமட்டுமின்றி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்று கூறி, அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் சூரி.
நல்லது நடந்தா சரிதான்...
Post a Comment