ஹைதராபாத்: நாளை வெளியாகப் போகும் பாகுபலி படத்தை எதிர்பார்த்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், எங்கு திரும்பினாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே இருக்கிறது.
சுமார் 4000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கும் பாகுபலி படம் தற்போது ஒரு புதிய சாதனையைப் படைத்தது இருக்கிறது.
பாகுபலி வெளியாகும் எல்லாத் திரையரங்குகளிலும் கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் 90% முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற எந்தப் படங்களும் இதுவரை செய்திடாத சாதனையாகும்.
எல்லா மொழிகளிலும் படத்தைப் பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள், காலை 5 மணியில் இருந்து கூட வரிசையில் நிற்கத் தயாராகி விட்டனர் ரசிகர்கள்.
Baahubali fever grips #Hyderabad. All the Best to @BaahubaliMovie team.
@RanaDaggubati @ssrajamouli @Shobu_ #Prabhas pic.twitter.com/fLOWV4EEm8
— WeAreHyderabad (@WeAreHyderabad) July 9, 2015 பாகுபலி படத்திற்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட தியேட்டர் அதிபர்கள் சத்தமில்லாமல் டிக்கெட்டுகளின் விலையை ஏற்றி விட்டனர், ஒவ்வொரு டிக்கெட்டும் நார்மல் விலையை விட 30% அதிகமான விலைக்கு விற்கப்படுகிறதாம்.
சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் முழுவதும் டிக்கெட் எடுக்க ரசிகர்கள் காத்திருக்கும் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றது, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் அதில் சந்தேகமே இல்லை.
இரண்டரை வருடங்களுக்கும் மேலான உழைப்புக்கு ரசிகர்களிடம் கிடைத்த இந்த வரவேற்பால், சந்தோஷத்தில் திணறிப் போயிருக்கின்றனர் பாகுபலி படக்குழுவினர்.
Post a Comment