தமிழில் மகதீராவாக வெளியாகும் தெலுங்கு எவடு!

|

ராம் சரண் - அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான தெலுங்குப் படமான எவடு தமிழில் மகதீரா என்ற தலைப்பில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் சாய்குமார், கிருஷ்ணமோகன், ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர்.

Evadu Tamil dubbed version titled as Magadheera

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.

யாரிப்பு - பத்ரகாளி பிரசாத். இவர் வம்பு, பத்ரா, காயத்ரி ஐ.பி.எஸ் உட்பட பல படங்களைத் தயாரித்தவர். வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் ஏகேஆர் ராஜராஜா. இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

அவரிடம் மகதீரா படம் பற்றி கேட்டோம்...

படு ஆக்ஷன் படம் இது. அல்லு அர்ஜுன் - காஜல் அகர்வால் இருவரும் காதலர்கள். காஜல் மீது தூத்துக்குடியில் உள்ள மிகப்பெரிய தாதாவுக்கும் காதல். வில்லனிடமிருந்து நினைக்கும் இருவரும் தப்பியோடுகிறார்கள். வில்லன் அவர்களை மடக்கி பிடித்து காஜலைக் கொன்று விடுகிறார்கள். அல்லு அர்ஜுனை தீவைத்து கொளுத்தி விடுகிறார்கள்.அதிலிருந்து தப்பிக்கும் அல்லு அர்ஜுனின் முகம் முழுவதும் எரிந்து போய் விடுகிறது.டாக்டர்களின் முயற்சியால் ராம்சரணின் முகம் அல்லு அர்ஜுனுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப் படுகிறது.

Evadu Tamil dubbed version titled as Magadheera

தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய வில்லன் கூட்டத்தை எப்படி பழி தீர்க்கிறார் என்பது கதை" என்றார்.

ராம்சரண் நடித்த முதல் தெலுங்குப் படத்தின் பெயர் மகதீரா. இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வந்தது. அவரது அடுத்த படமான எவடுக்கு, தமிழில் மகதீரா எனப் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment