உலகநாயகன் என்ற பட்டத்தை விட, நடிகன் கமல் என்ற அடைமொழியே எனக்குப் போதும் என்று கமல் ஹாஸன் கூறினார்.
ஜீது ஜோசப் இயக்கத்தில் கமல் - கவுதமி நடித்த பாபநாசம் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் பாபநாசம் படத்தில் நடித்த அத்தனைப் பேரும் கலந்து கொண்டு மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினர்.
அப்போடு கமலிடம், "பாபநாசம்' படத்தில் போலீஸிடம் அடி வாங்குவது போல் நடிக்க எப்படிச் சம்மதித்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், "எனக்கு தனியாக முகவரி கிடையாது. நான் ஒரு நடிகன். நீங்கள் தான் 'உலக நாயகன்' என்று பட்டத்தை கொடுத்து தள்ளிவைத்து இருக்கிறீர்கள். என்னை கமல்ஹாசன் என்று அழைப்பதைவிட நடிகன் என்று கூப்பிட்டால் பெருமைப்படுவேன்," என்றார்.
ஒரு மலையாள ரீ-மேக்கில் நடித்தது பற்றி கேட்டதற்கு, "சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி பார்த்தால் நமக்கு எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். நான் இங்கே தமிழ் மீடியாக்கள் மத்தியில் நின்று சொல்கிறேன். நான் பாதி மலையாளி. இதை அப்படியே கேரளாவில் சொன்னால் 'கமல் முழு மலையாளி' என்று உரிமையாக சண்டைக்கு வருவார்கள்," என்றார்.
Post a Comment