சென்னை: த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி. பிரகாஷ் 36 டேக்குகள் வாங்கியுள்ளார்.
இசையமைப்பாளராக கோலிவுட் வந்த ஜி.வி. பிரகாஷ் தற்போது ஹீரோவாகிவிட்டார். டார்லிங் பேய் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ஜி.வி. பிரகாஷ், மனிஷா யாதவ் இடையேயான முத்தக் காட்சி உள்ளது. அந்த காட்சியில் நடிக்க ஜி.வி. மிகவும் அஞ்சியுள்ளார். அவர் பதற்றம் அடைந்ததால் காட்சி சரியாக வராமல் 36 டேக்குகள் வாங்கியுள்ளார்.
ஹீரோ அத்தனை டேக் வாங்கியபோதிலும் மனிஷா கோபம் அடையாமல் பொறுமையாக அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். ஒரு வழியாக ஜி.வி. முத்தக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் அம்மாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டாராம்.
இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் கௌரவ வேடத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment