சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையா எந்த ஆர்ப்பாட்டமும் பரபரப்பும் இல்லாமல் கமல் ஹாஸனின் ஒரு படம் வெளியாகிறது என்றால் அது பாபநாசம்தான்.
வழக்கமாக கமல் ஹாஸனின் படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் முதல்நாள் காட்சிக்கு அலைமோதுவார்கள். படம் வெளியாகும் அரங்குகளின் முன் கட் அவுட்கள், பேனர்கள், வாண வேடிக்கை என அமர்க்களப்படுத்துவார்கள்.
ஆனால் இந்த முறை இவையல்லாம் மிஸ்ஸிங். அதுவும் தலைநகர் சென்னையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் ஆக்ஷன் அல்லது ரொமான்டிக் படமில்லை. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். இம்மியளவு கூட ஹீரோயிசம் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு சாதாரண மனிதனாக கமல் நடித்திருக்கிறார். பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதாலேயே இப்படி அமைதியாக படத்தை வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு முன் மகாநதி படம் கிட்டத்தட்ட இதே சூழலில் வெளியாகி பெரும் வெற்றியும் பாராட்டுகளையும் குவித்தது நினைவிருக்கலாம். அதே வெற்றி இந்தப் படத்துக்கும் கிடைக்கும் என்பதுதான் இப்போதைய நிலவரம்!
Post a Comment