4 மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய திரிஷ்யம் 5 வது மொழியிலும் வெற்றி பெறுமா?

|

சென்னை: மலையாளப் படமான திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளிலும் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழில் இன்று தானே படம் வெளியானது அதற்குள் மாபெரும் வெற்றிப் பட்டியலில் சேர்த்து விட்டீர்களே என்று யாரும் யோசிக்க வேண்டாம்.

4 Languages Get A Huge Success Of

தமிழில் இன்று வெளியாகி இருக்கும் பாபநாசம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், பாபநாசம் திரைப்படத்தையும் வெற்றிப் பட்டியலில் இணைத்துக் கொண்டுளோம்.

நல்ல கதையை எந்த மொழியில் எடுத்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள், என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது திரிஷ்யம்.

தென்னிந்திய மொழிகளில் வெற்றிக் கொடி நாட்டிய திரிஷ்யம், அடுத்து அஜய் தேவ்கன் ஸ்ரேயா நடிப்பில் இந்தியிலும் வெளியாக இருக்கிறது.

இந்தியிலும் படம் வெற்றி பெரும் பட்சத்தில் ஒரு மாபெரும் சாதனையைப் படைத்த படம், என்ற வரிசையில் சமர்த்தாக இணைந்து விடும் திரிஷ்யம்.

திரிஷ்யம் இந்தியிலும் வெற்றி பெறுகிறதா என்று சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம் ...

 

Post a Comment