ஸ்லிம் அன் டிரிம் ஆன கருத்தம்மா!

|

இயக்குநர் சிகரத்தினால் கருத்தம்மாவில் அறிமுகமான அந்த நடிகை முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றவர்.

கதாநாயகியாக சில படங்களில் மட்டுமே நடித்த அந்த நாயகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தபோதும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். வெளிச்ச நடிகரின் படத்தில் அம்மாவாக வந்து, உருகும் நடிப்பால் உள்ளம் தொட்டவர். 60 திரைப்படங்கள், 50 தொலைக்காட்சித்தொடர்களில் நடித்த அந்த திருமணத்துக்குப்பின்னர் குடும்பப் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தியதால் உடலை கவனிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் உடல் எடை இருமடங்கு அதிகமாகிவிட்டது.

சூரிய தொலைக்காட்சியில் ரம்யமான நடிகையின் சீரியலில் நடித்த அந்த நடிகையின் கதாபாத்திரத்தை பாதியிலேயே முடித்து விட்டார் ரம்யம். இதனால் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்த அந்த நடிகை, தற்போது முழு கவனம் செலுத்தி உடல் எடையைக் குறைத்துள்ளாராம். அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக கோடம்பாக்கத்தில் வலம் வருவதற்கு தயாராக இருக்கிறார்.

இவரது முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை கரகாட்ட பட இயக்குநரின் தயாரிப்பில், களவாணி பட இயக்கநர் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறாராம் நடிகை. ஹீரோவுக்கு அம்மாவாக, உள்ளம் தொடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் இந்தப்படம் வெளிவந்தபிறகு கோடம்பாக்கத்தின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறார் கருத்தம்மா.

 

Post a Comment