15 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார்!
6/20/2011 10:31:59 AM
6/20/2011 10:31:59 AM
"பதினைந்து நாட்களில் ரஜினி, சென்னை திரும்புவார்" என்று நடிகர் தனுஷ் கூறினார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நடிகர் தனுஷ் நேற்று அதிகாலை திருமலை வந்தார். அதிகாலை 3 மணிக்கு ரூ.300 டிக்கெட் மூலம் தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'ரஜினி பூரணமாக குணமடைந்து விட்டார். இன்னும் 15 நாட்களில் அவர் சென்னைக்கு திரும்புவார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'ராணா' படத்தை, அவர் நல்ல முறையில் நடித்து கொடுப்பார்" என்றார். திருமலைக்கு திடீரென வந்தது பற்றி கேட்டபோது, தனது அக்காவின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு மொட்டை போட வந்ததாக கூறினார். அவருடன் தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் மற்றும் அக்கா குடும்பத்தினர் வந்திருந்தனர்.
Post a Comment