டி20 சாம்பியன்ஸ் லீக்: பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

டி20 சாம்பியன்ஸ் லீக்: பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்!

6/20/2011 12:10:51 PM

10 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்கான் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிக்கு, அமிதாப் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, போட்டியின் நடத்துநர்களான இஎஸ்பிஎன் ஸ்போர்ட்ஸ், ஷாரூக்கானை அணுகியுள்ளது. அவரும் இந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் போட்டியில் ஐபிஎல்லில் பங்கேற்ற அணிகளிலிருந்து மூன்று அணிகள் பங்கேற்கின்றன. இப்போது நான்காவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான்தான் என்பதால், அவர் நிச்சயம் விளம்பரத் தூதராக இருப்பார் என்று இஎஸ்பிஎன் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Post a Comment