கார்த்தி திருமணம் பற்றி காஜல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்தி திருமணம் பற்றி காஜல்

6/20/2011 12:15:01 PM

காஜல் அகர்வால் கூறியது: கார்த்தி எனது நண்பர். 'நான் மகான் அல்ல’ படத்தில் நடித்தபோது நட்பாக பழகினோம். நம்பிக்கைக்குரியவர். அவர் தனது வாழ்க்கை துணையாக பொருத்தமான பெண்ணை தேர்வு செய்திருக்கிறார். அந்த ஜோடிக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். ஆனந்தின் படங்களும் அவர் பணியாற்றும் ஸ்டைலும் பிடிக்கும். 'மாற்றான்’ படத்தில் எனது கேரக்டர் பேசப்படும். இதற்குமுன் நடித்த கேரக்டர்களில் இருந்து இது மாறுபட்டது. கதை கேட்டபோதே அதை உணர்ந்தேன். தெலுங்கில் நடித்த 'மகதீரா’, தமிழில் 'மாவீரன்’ பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் இளவரசியாக நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். வரலாற்று படத்தில் நடிப்பதென்றால் நிறைய கவனம் தேவை என்பதை அந்த வேடத்தில் நடித்தபோது தெரிந்துகொண்டேன். இதற்காக  தனி நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். கமர்சியல் படத்தில் நடிப்பதைவிட அதிக ஈடுபாடு தேவை.

 

Post a Comment