அமிதாப் பச்சன் நடித்து வெளியான “புத்தா ஹோகா தேரே பாப்” படத்தின் வசூலை அமீர்கான் தயாரிப்பில் வெளியான “டெல்லி பெல்லி” படம் முறியடித்துவிட்டது.
திங்கட்கிழமை வரை வசூலான கணக்கின் படி புத்தா ஹோகா தேரே பாப் 1000 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 8.5 கோடி ரூபாய் வரைதான் வசூல் செய்துள்ளது. ஆனால் அமீரின் படமான டெல்லி பெல்லி படம் 1200 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 30 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்திருக்கிறது என்று ஐபிஒஎஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
டெல்லி பெல்லி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். குறிப்பாக டாய்லெட் காமெடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறதாம். இதற்காகவே அநேக ரசிகர்கள் டெல்லி பெல்லி படத்தை கண்டு ரசித்திருக்கின்றனர்.
அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், விர்தாஸ், பூர்ணா ஜெகன்நாதன், ஆகியோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை அபினய் தேவ் இயக்கியுள்ளார். அக்ஷத் வர்மா எழுதிய டெல்லி பெல்லிக்கு ராம் சம்பத் இசை அமைத்திருக்கிறார். இம்ரான் கான், ஆமிர்கானின் உறவுக்காரர் என்பது நினைவிருக்கலாம்.
புத்தா ஹோகா தேரே பாப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய அமிதாப்பை பார்க்க முடிந்ததாக தெரிவித்திருக்கின்றனர் ரசிகர்கள். இது நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தை பிடிக்கும் என்று அமிதாப் நம்பியிருந்தார். அவரது கனவை அமீர்கானின் டெல்லி பெல்லி படம் தகர்த்து விட்டது.

Post a Comment