ரஜினிக்கு வீடு தேவை!

|


சிங்கப்பூரிலிருந்து விரைவில் சென்னை திரும்பவிருக்கும் ரஜினிகாந்த்துக்கு சென்னையில் ஒரு வீடு தேடி வருகிறார்களாம்.

போயஸ் கார்டனில் கடல் போல வீடு இருக்க எதற்கு புது வீடு என்று யோசிக்கிறீர்களா?. போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல புதுப்பித்தல், மாற்றியமைத்தல் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதால் தற்காலிகமாக தங்கத்தான் இந்தப் புது வீடு பார்க்கும் படலமாம்.

ரஜினிக்கு கடும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரி செய்வது வழக்கமாகி விட்டது.

முன்பு பாபா படம் வெளியாகி பெரும் தோல்வி மற்றும் பாமகவால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் இதேபோலகத்தான் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களை வீட்டில் செய்தனர்.

அதன் பின்னர் வெளியான சந்திரமுகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் வாஸ்து மீது ரஜினிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கை வந்து விட்டது.

தற்போதும் ரஜினிக்கு உடல் நலம் பெரும் பாதிப்பை சந்தித்து அவர் கிட்டத்தட்ட கண்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் போயஸ் தோட்ட வீட்டில் வாஸ்துப்படி பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகின்றனராம்.

எனவே ரஜினி சென்னைக்கு வந்ததும் தனது வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்காமல் வெளியில் தங்கியிருக்கப் போகிறாராம். இதற்காகத்தான ஒரு வீட்டைப் பார்த்து வருகின்றனர் என்கிறார்கள்.

 

Post a Comment