நடிகை ரேகாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சிரஞ்சீவி?

|


சிரஞ்சீவி தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்கத் துவங்கும் முன் தன்னுடன் சேர்ந்து ஒரு இந்திப் படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை ரேகா சிரஞ்சீவியிடம் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சிரஞ்சீவி, சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார். எனவே மீண்டும் நடிக்கப் போவதாக அதே மேடையில் அறிவித்தார் சிரஞ்சீவி.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி, நடிகை ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடைக்கு வந்த சிரஞ்சீவியிடம் ரேகா கூறுகையில்,

"நீங்கள் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கும் முன்பு என்னுடன் சேர்ந்து ஒரேயொரு இந்திப் படத்திலாவது நடிக்க வேண்டும். என்னுடன்தான் முதலில் நடிக்க வேண்டும். ப்ளீஸ்...", என்று செல்லமாக கொஞ்ச, சிரஞ்சீவியை வெட்கத்துடன் சம்மதம் சொன்னார்.

இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 

Post a Comment