வல்லவன் படம் நடித்தபோது சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் பற்றிக் கொண்டது. இருவரைப் பற்றிய செய்திகளும் இடம்பெறாத ஊடகமே இல்லை எனும் அளவுக்கு நிலை முற்றிப் போயிருந்தது, சில ஆண்டுகளுக்கு முன்.
பின்னர் அந்தக் காதலில் முறிவு ஏற்பட, வாழ்க்கையே வெறுத்துப் போய் ஆந்திரா பக்கம் போய்விட்டார் நயன்தாரா. ஒரு வழியாக அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்த அவர், பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டார்.
இன்று அந்தக் காதல் கல்யாணம் வரை வந்துவிட்டது.
நயன்தாரா – பிரபுதேவா திருமணம் நடக்கவுள்ள இந்த நேரம் பார்த்து, சிம்புவிடம் நயன்தாராவுடனான பழைய காதல் குறித்து கேட்டிருந்தனர். நயன்தாரா போன பிறகு தனிமையை உணர்ந்தீர்களா? என்ற கேள்விக்கு, அவர் அளித்துள்ள பதிலில், “காதல் தோல்வியால் இதுவரைக்கும் நான் எந்த தனிமையையும் உணரவில்லை. எல்லாமும் நடந்து முடிந்துவிட்டதே என விட்டுவிடவும் முடியவில்லை.
இந்த 25 வருஷத்தில் நிறைய மாற்றங்கள். எல்லாவற்றையும் ரசிக்கிறேன். திகட்ட திகட்ட காதலிச்சாச்சு. இனி அந்தக் காதலின் அடையாளங்கள் என எதும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது.
எல்லாமே மாறக் கூடியதுதானேன்னு என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன். என்னை பொறுத்த வரைக்கும் தனிமையை எல்லா மனிதர்களும் உணரணும். அப்போதுதான் நல்லது, கெட்டது புரியும்,” என்றார்.
Post a Comment