'புதுமாப்பிள்ளை' கார்த்தியுடன் சகுனி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரனீதா.

|


தமிழ் சினிமாவுக்கு வந்த புதுமுகம் பிரனீதா. கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள இவர் நடித்த முதல் படம் உதயன். பெரிய கண்களாலும், துறு துறு நடிப்பாலும், அனைவரையும் கவர்ந்திழுத்துள்ள பிரனீதாவுக்கு இப்போது முன்னணி நாயகர் கார்த்தியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் சகுனி படத்தில்தான் பிரனீதா ஜோடி போடுகிறார்.

இப்படம் அரசியல் கலந்த திரில்லர் படமாகும். சங்கர் தயாள் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்கும் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. நான் மகான் அல்ல படத்தில் நடித்த காஜல் அகர்வால் பெயரும் லிஸ்ட்டில் இருந்தது. ஆனால் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இறுதியில் பிரனீதா இடம் பிடித்து விட்டார்.

பிரனீதாவின் நடிப்பு பலரையும் கவர்ந்திருப்பதால் கோடம்பாக்கத்தின் இளைய ஹீரோக்களின் குட்புக்கில் இடம் பெற ஆரம்பித்திருக்கிறாராம்.

பிரனீதா வந்து விட்டார். எனவே அமலா பால், அனுஷ்கா போன்றோர் சற்றே கவனத்துடன் இருக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது.
 

Post a Comment