சக்சேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி?

|


சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் வெளியீட்டு உரிமை தொடர்பாக சேலம் விநியோகஸ்தர் கொடுத்த ரூ 83 லட்சம் மோசடி புகாரில் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு நீதிமன்றம் வழங்கிய போலீஸ் காவல் இன்று மாலை 4.15 மணிக்கு முடிகிறது. இதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீசார், போலீஸ் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீது மேலும் சில புகார்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேலும் விசாரிக்க இந்த காவல் நீட்டிப்பை போலீசார் கோரவுள்ளார்களாம்.

இன்னொரு பக்கம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அவர் தந்தையும் சக்ஸேனாவை எப்படியாவது குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்வதாகவும், இந்தக் கைதுக்கு காரணமான சேலம் விநியோகஸ்தர் செல்வராஜை இயக்குவதே அவர்கள்தான் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சக்சேனா விவகாரத்தில் சன் குழுமம் இதுவரை பகிரங்கமாக எந்த விளக்கமும் வெளியிடாமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது!
 

Post a Comment