சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை - ஷீலா

|


குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடர்ந்தவர் ஷீலா. ஓரிரு படங்களில் நாயகியாக நடித்தார் தமிழில். ஆனால் எந்தப் படமும் ஓடவில்லை.

ஆனாலும் சம்பள விஷயத்தில் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பிகு பண்ணுவதால், தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லை.

ஆனால் தெலுங்கில் அவருக்கு நல்ல மார்க்கெட். இதனால் மேலும் மேலும் சம்பளத்தை ஏற்றிக் கொண்டே போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். நான் முதலில் தேர்ந்தெடுத்த படங்கள் சரியாக இல்லாததால்தான் இன்னும் தமிழில் எனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. மலையாளத்தில் வெளியான 'மேக்கப் மேன்' பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே அங்கே சம்பளத்தை அதிகமாகத்தான் கேட்க முடியும். மற்ற மொழிகளிலும் படங்கள் ஜெயித்தால் சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை," என்றார் ஷீலா.
 

Post a Comment