சுள்ளான் நடிகரின் அண்ணன் திருமணத்தின்போது, அவரது இரு குழந்தைகளையும் படமெடுத்து முன்னணி பத்திரிகை வெளியிட்டுவிட்டதில் செம கடுப்பாகிவிட்டாராம் சுள்ளான் நடிகர்.
இந்த திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. திருமணம் முடிந்ததும் புகைப்படங்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் தினசரி நிருபர்கள் மற்றும் சில புகைப்படக்காரர்கள் மட்டும் போயிருந்தனர். அவர்களிடம் தனது குழந்தைகளின் படங்களை மட்டும் வெளியிடக் கூடாது என்று கூறியிருந்தாராம் நடிகர்.
குறிப்பிட்ட பத்திரிகையின் புகைப்படக்காரர் மட்டும் எப்படியோ அந்த இரு குழந்தைகள் படத்தையும் எடுத்துக் கொடுக்க, நிர்வாகமும் முக்கியத்துவம் தந்து வெளியிட்டுவிட்டது. வேறு எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை.
இதனால் கோபமடைந்த நடிகர், தனது ட்விட்டரில், குறிப்பிட்ட அந்த நிருபர் வேண்டுமென்றே படத்தை வெளியிட்டதாகவும், இது அநாகரீகத்தின் உச்சம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விஷயம் தெரிந்ததும் வருத்தப்பட்ட நிருபர், 'இதில் எனது தவறு எதுவுமில்லை. அவர் வெளியிட வேண்டாம் என்று சொன்னாலும், அதை முடிவு செய்ய வேண்டியது நிர்வாகம்தானே. ஒரு பத்திரிகையாளரின் சூழலை அவர் புரிந்து கொண்டிருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார்,' என்றார்.

Post a Comment