வரும் 15ம் தேதி தியேட்டர்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக, வரும் 15ம் தேதி தியேட்டர்களில் படம் ஓடாது என்று செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன சிறப்பு கூட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்ட முடிவில் அதன் தலைவர் அபிராமி ராமநாதன், நிருபர்களிடம் கூறும்போது, ''முல்லை பெரியாறு பிரச்னை மட்டுமின்றி வேறு எந்த பிரச்னையாக இருந்தா லும் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், முதல்வர் எடுக்கும் அனைத்து நடிவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார். 15ம் தேதி தியேட்டர்கள் மூடப்படுவது பற்றி கேட்டபோது, "நாங்கள் தியேட்டர்களை மூடுவதாகவோ, உண்ணாவிரதம் இருப்பதாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை. தியேட்டர்கள் வழக்கம்போல செயல் படும்'' என்றார். பேட்டியின்போது பொதுச் செயலாளர் 'கணபதிராம்' ஜெயகுமார், துணை தலைவர் 'சாந்தி' வேணுகோபால், செயலா ளர் சத்யசீலன் உடன் இருந்தனர்.
Post a Comment