ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தான் வரைந்த ஓவியங்களை, ஒவ்வொரு வருடமும் கண்காட்சியாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு அவர் நடத்தும் கண்காட்சிக்கு, 'டைம் லைன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் தோட்டா தரணி கூறியதாவது: கடந்த 45 ஆண்டுகளாக நான் வரைந்த ஓவியங்களை, பாதுகாத்து வருகிறேன். இதற்குமுன் நான் நடத்திய கண்காட்சிகளில், வெவ்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஓவியங்கள் இடம்பெற்றன. இதற்கு வரவேற்பு கிடைத்தது. இதுவரை வரைந்த ஓவியங்களில் சிறப்பானது என்று கருதுபவற்றை, லலித்கலா அகாடமி, போகஸ் ஆர்ட் கேலரி, ஆர்ட் அன்ட் சோல் ஆகிய இடங்களில் கண்காட்சியாக நடத்துகிறேன். 16 முதல் 23ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது. 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றி இருந்தாலும், தினமும் ஓவியம் வரையாமல் தூங்கியதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் எவ்வளவோ வசதிகள் வந்தாலும் பென்சிலில் வரைவதில் இருக்கும் ஈடுபாடு குறைய இல்லை. இவ்வாறு தோட்டதரணி கூறினார். முன்னதாக அவர் பற்றிய டாகுமென்டரி திரையிடப்பட்டது.
Post a Comment