வன்முறைக்கு எதிரான படம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அசோகன், க்யூ சினிமாஸ் சார்பில் தயாரித்து இயக்கும் படம் 'கம்பன் கழகம்'. அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாம், பிரசன், பிரவீன் என்ற மூவர் இசை அமைக்கிறார்கள். புதுமுகங்கள் பிரபு, ராய்சென், நவீன், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கிறார்கள். பாண்டிச்சேரி பின்னணியில் எடுக்கப்படும் இப்படம் பற்றி அசோகன் கூறியதாவது:
இந்தியாவுக்கு அகிம்சை நாடு என்ற பெயர் இருக்கிறது. ஆனால் இன்று அந்த அகிம்சையை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நமது கலாசாரம், பண்பாடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படி போவதற்கு என்ன காரணம்? எதற்கும் வன்முறை தீர்வாகாது என்ற கருத்தை மையப்படுத்தி படம் உருவாகிறது. படத்துக்கு கவித்துவமான தலைப்பு தேவைப்பட்டதால்,'கம்பன் கழகம்' என்ற தலைப்பை வைத்தோம். கதைக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது. படம் முடிந்துவிட்டது. ஒரு பாடலை மலேசியாவில் படம் பிடித்துள்ளோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதி அல்லது ஜனவரியில்  ரிலீஸ் ஆகும். இவ்வாறு அசோகன் கூறினார்.


 

Post a Comment