தேவ் ஆனந்த் உடல் லண்டனில் தகனம் - அஸ்தி மும்பை வருகிறது!

|


லண்டன்: பிரபல நடிகர் தேவ் ஆனந்தின் உடல் லண்டனிலேயே இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியுடன் உறவினர்கள் திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது அங்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தேவ் ஆனந்த் உடலுக்கு லண்டனிலேயே இறுதி சடங்கு நடத்த உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இன்று உடல் தகனம் நடந்தது. முன்னதாக தேவ் ஆனந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

லண்டனில் வசிக்கும் இந்தியர்களும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் தகனம் நடந்தது.

அஸ்தி கலசத்துடன் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் திங்கட்கிழமை இந்தியா திரும்புகிறார்கள்.
 

Post a Comment