ஒளிப்பதிவாளர் ராம்ஜி, நிருபர்களிடம் கூறியதாவது: 'வள்ளல்' படத்தில் அறிமுகமாகி 7 இந்தி படங்கள் உட்பட 16 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். அமீருடன், 'மவுனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்' படங்களிலும், செல்வராகவனுடன் 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களிலும் பணியாற்றி இருக்கிறேன். 'பருத்தி வீரன்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு கிடைக்கும் என்றார்கள். பிறகு ஒரு ஓட்டில் தவறிவிட்டது என்றார்கள். பொதுவாக விருதுகளை எதிர்பார்த்து பணியாற்றுவதில்லை. அடுத்து 'இரண்டாம் உலகம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன். ஒளிப்பதிவாளனுக்கு சவாலான கதைக் களம். 'பருத்தி வீரனு'க்குப் பிறகு அதே மாதிரி கிராமத்து கதைகள் வந்தது. தவிர்த்தேன். ஒளிப்பதிவாளன் இமேஜ் வட்டத்துக்குள் சிக்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. விரைவில் படம் இயக்க இருக்கிறேன்.
Post a Comment