பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனமான அபிநயா கிரியேஷன்ஸ் 17-வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதுகுறித்து அதன் கிரியேட்டிவ் தலைவர் ஜே.கே., நிருபர்களிடம் கூறியதாவது: அபிநயா கிரியேஷன்ஸ் 1986-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1996ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களை தயாரிக்கத் தொடங்கியது. 'காஸ்ட்லி மாப்பிள்ளை' முதல் தொடர். பிறகு 'மாண்புமிகு மாமியார்', 'மகாராணி செங்கமலம்', 'கிரீன் சிக்னல்', 'செல்லம்மா', 'மங்கள அட்சதை', 'கேள்வியின் நாயகனே', 'என் பெயர் ரங்கநாயகி', 'மாங்கல்யம்', 'ஆடுகிறான் கண்ணன்', 'தீர்க்க சுமங்கலி', 'செல்லமடி நீ எனக்கு', 'திருப்பாவை', 'அனுபல்லவி', இப்போது ஒளிபரப்பாகி வரும் 'வெள்ளைத்தாமரை' என 15 தொடர்களை தயாரித்துள்ளது. அனைத்து தொடர்களுமே சன் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானதை பெருமையாகக் கருதுகிறோம். அடுத்து காமெடி தொடர் ஒன்றைத் தயாரிக்கிறோம். திரைப்படம் தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது. இதற்காக 'நாடகம்' என்ற கதை தயாராக உள்ளது. விரைவில் அதையும் தொடங்குவோம்.
Post a Comment