பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லட்சுமண் தயாரிக்கும் படம், 'சிங்கம் 2'. சன் பிக்சர்ஸ் வெளியிட்டு சூப்பர் ஹிட்டான 'சிங்கம்' படத்தின் இரண்டாம் பாகம் இது. சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர். மற்றும் விவேக், சந்தானம், ரகுமான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரியன், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். பாடல்கள், நா.முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹரி இயக்குகிறார். அதிரடி ஆக்ஷன் படமான இதன் கதை, தூத்துக்குடியில் தொடங்கி, தென்னாப்பிரிக்காவில் முடிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
Post a Comment