'ரிவால்வர் ரீட்டா' ஆகிறார் ரிஹானா!

|

Rihanna
புதிய ஹாலிவுட் படத்தில் வில்லி அவதாரம் எடுக்கிறார் பாடகி ரிஹானா.

பார்படாஸைச் சேர்ந்தவரான ரிஹானா, தனது அசத்தல் குரலால் ரசிகர்களை ஈர்த்த பாப் பாடகி. தற்போது அவர் நடிகையும் கூட. தனது முதல் படமான பேட்டில்ஷிப் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். இப்போது வில்லி அவதாரம் எடுக்கிறார். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் படத்தின் தொடர்ச்சியில் அவர் தாறுமாறாக சண்டைக் காட்சிகளில் பூந்து விளையாடப் போகிறாராம்.

சூப்பர் கார்களை ஓட்டியபடியும், அதி நவீன துப்பாக்கிகளால் டுப் டுப்பென்று சுட்டபடியும் அதகளம் செய்கிறாராம் ரிஹானா. இப்படத்தில் வான் டீசல், வேயன் ஜான்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். தி பாஸ்ட் அன்ட் தி பியூரியஸ் பட வரிசையில் இது 6வது படமாகும்.

இந்தப் படத்தின் மூலம் ரிஹானாவைத் தேடி இனி ஏகப்பட்ட ஆக்ஷன் படங்கள் ஓடி வரும் என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் லண்டனிலேயே நடக்கப் போகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

தற்போது லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஷூட்டிங் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு கருதி நகருக்குள் அனுமதிக்காமல் உள்ளனர். இதனால் சில கார் சேசிங் காட்சிகளை எஸ்ஸக்ஸ் பகுதியில் எடுக்கவுள்ளனராம்.

ரிவால்வர் ரீட்டா வேடம் ரிஹானாவுக்கு எப்படி பொருந்தி வருதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!
 

Post a Comment