கோடம்பாக்கத்தை குறிவைக்கும் தெலுங்கு நடிகர்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இதில் பல படங்கள் வசூலை அள்ளுகின்றன. இதே பாணியில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ராணா, நானி, அல்லரி நரேஷ், ஷர்வானந்த் ஆகிய நடிகர்கள் தமிழ் மார்க்கெட் பிடிக்க களத்தில் குதித்துள்ளனர். 'கவுரவம்' படத்தில் அல்லு சிரிஸ் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கும் படத்தில் ராணா நடிக்க உள்ளார். ஏற்கனவே 'எங்கேயும் எப்போதும்'ல் ஷர்வானந்த், 'வெப்பம்' படத்தில் நானி, 'போராளியில் அல்லரி நரேஷ் நடித்தனர். இதுதவிர தெலுங்கு பட நிறுவனங்கள் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. மோகன்பாபுவின் மகள் லட்சுமி மன்சூ 2 தமிழ் படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ஒரு படத்தில் அவரது தம்பியும் தெலுங்கு ஹீரோவுமான மனோஜ் நடிக்கிறார். அத்துடன் மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் லட்சுமி மன்சு நடிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த பிந்து மாதவியும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதுபற்றி தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கு படவுலகினர் இப்போதுதான் விழித்துக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி ரூ.10 கோடி முதல் 15 கோடிவரை வசூல் குவிக்கின்றன. அதனால் தெலுங்கு நடிகர்களின் பார்வை கோடம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது என்றார்.


 

Post a Comment