மே தினம் கொண்டாடுவது தொடர்பாக பெப்சியில் புதுக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இதன் தலைவர் ராமதுரை, செயலாளர் சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் இயக்குனர் சங்க பிரதிநிதிகள் எஸ்.பி.ஜனநாதன், வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மே தின கொண்டாட்டம் குறித்து பேசப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக வைத்து பெப்சி, மே தினத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து இருப்பதால் யாரை அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், இறுதிவரை குழப்பம் நிலவியதால் முடிவு எடுப்படவில்லை. இருந்தாலும் மே தினத்தை பிரமாண்டமாகக் கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment